Published:Updated:

பரபரப்பான அரசியல் சூழல்... ம.தி.மு.க. உயர்நிலைக்குழு ஆலோசனை

Vikatan Correspondent
பரபரப்பான அரசியல் சூழல்... ம.தி.மு.க. உயர்நிலைக்குழு ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழல்... ம.தி.மு.க. உயர்நிலைக்குழு ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழல்... ம.தி.மு.க. உயர்நிலைக்குழு ஆலோசனை

பிப்ரவரி 5ம் தேதி துவங்கி, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறிய போது, அதில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ம.தி.மு.க. முதல்வராக சசிகலாவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தது, ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு, ஓ.பி.எஸ். தலைமையில் தனி அணி உதயம், சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் தாமதித்தது, சசிகலாவுக்கு சிறை தண்டனை என அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வு குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

செய்தியாளர்கள் கேட்டபோது கூட எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் வைகோ. தமிழக அரசியலில் எந்த கால கட்டத்திலும் ஏற்பட்டிராத இது போன்ற திருப்பங்களின் பொது ம.தி.மு.க.வின் மவுனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் ம.தி.மு.க.வின் பொதுக்குழு கோவையில் நாளை கூடுகிறது. ம.தி.மு.க.வின் 25வது பொதுக்குழு இதுவாகும். 20 ஆண்டுகளுக்கு பின்னர் ம.தி.மு.க.வின் பொதுக்குழு கோவையில் நாளை கூடுகிறது. இதையொட்டி, கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டமும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் கோவையில் இன்று நடைபெற்றது.

பரபரப்பான அரசியல் சூழல்... ம.தி.மு.க. உயர்நிலைக்குழு ஆலோசனை

கோவையில் இன்று காலை, மதிமுக உயர்நிலை குழு கூட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி இல்லத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி, பொருளாளர் ஈரோடு கணேச மூர்த்தி, ஆர்.எம்.சண்முகசுந்தரம், புதுக்கோட்டை , செந்தில்அதிபன், ஆர்.டி.மாரியப்பன், கு.சின்னப்பா, வழகறிஞர் தேவதாஸ், வழகறிஞர் வீரபாண்டியன் உள்ளிட்ட 17 பேர் பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் திருப்பங்கள், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள், உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, நாளை பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதன் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்கள் மத்தியிலும், சமூக வலை தளங்களிலும்  வைகோ மீது எழுந்துள்ள கடுமையான விமர்சனம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் ம.தி.மு.க. பயணிக்க வேண்டிய பாதை குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

- தி.விஜய்