Published:Updated:

ஜெயலலிதா சிகிச்சை குறித்து சர்ச்சை: டாக்டர் என்று கூறிய சீதா கைது

Vikatan Correspondent
ஜெயலலிதா சிகிச்சை குறித்து சர்ச்சை: டாக்டர் என்று கூறிய சீதா கைது
ஜெயலலிதா சிகிச்சை குறித்து சர்ச்சை: டாக்டர் என்று கூறிய சீதா கைது

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைப் பற்றி சர்ச்சைக்குரிய பேட்டி அளித்த டாக்டர் என்று கூறிய சீதா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்து சர்ச்சை: டாக்டர் என்று கூறிய சீதா கைது

படம்: வி.ஶ்ரீநிவாசுலு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராமசீதா என்பவர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து  அப்போலோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் சீதா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சீதா தன்னை அப்போலோ மருத்துவர் என்றும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீதாவிடம் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீதா பெரம்பூரை சேர்ந்தவர் என்றும், அவர் மருத்துவரே இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.