Published:Updated:

'15 வருடத்தில் செய்யாததை, 15 மாதத்தில் செய்வோம்' - மோடி

Vikatan Correspondent
'15 வருடத்தில் செய்யாததை, 15 மாதத்தில் செய்வோம்' - மோடி
'15 வருடத்தில் செய்யாததை, 15 மாதத்தில் செய்வோம்' - மோடி

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் மார்ச் 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'மணிப்பூரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு காரணம் 15 ஆண்டுகளாக, இங்கு ஆட்சி செய்யும் காங்கிரஸ்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் 15 ஆண்டுகளில் செய்யாததை, 15 மாதங்களில் செய்வோம்.

'15 வருடத்தில் செய்யாததை, 15 மாதத்தில் செய்வோம்' - மோடி

மணிப்பூர் உள்பட அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். வடகிழக்கு மாநில முதல்வர்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். மணிப்பூரில் உள்ள பொருளாதார பிரச்னையை சரி செய்வோம். எனவே, 15 ஆண்டுகள் காங்கிரஸ்க்கு வாய்ப்பு கொடுத்தது போல், எங்களுக்கு 5 ஆண்டு வாய்ப்பு கொடுங்கள்' என்றார்.