Published:Updated:

''ஆம்...!உள்கட்சி விரோதிகளை நாங்கள் கொல்வது உண்மைதான்!”

''ஆம்...!உள்கட்சி விரோதிகளை நாங்கள் கொல்வது உண்மைதான்!”
''ஆம்...!உள்கட்சி விரோதிகளை நாங்கள் கொல்வது உண்மைதான்!”
''ஆம்...!உள்கட்சி விரோதிகளை நாங்கள் கொல்வது உண்மைதான்!”

திருவனந்தபுரம்:கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்களை நாங்கள் கொல்வது உண்மைதான் என்றும்,அரசியல் எதிரிகளை அப்படி கையாண்ட வரலாறு கட்சிக்கு உண்டு என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் ஆதரவாளராக இருந்த டி.பி. சந்திரசேகரனுக்கும், கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சந்திரசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி `புரட்சிகர மார்க்சிஸ்ட்' என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய நிலையில்,அவருக்கு செல்வாக்கு அதிகரித்த நிலையில் சந்திரசேகரன் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இது கேரளாவில் பல்வேறு சந்தேகங்களையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியது.இந்நிலையில், இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எம்.எம். மணி நேற்று நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டம் ஒன்றில்,”
"கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களின் தொண்டர்கள் பட்டியலை தயாரித்து, அவர்களை கட்சி கொலை செய்திருக்கிறது.கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்கள் ககத்தியால் குத்தப்பட்டும், சுடப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.அரசியல் எதிரிகளை அப்படி கையாண்ட வரலாறு கட்சிக்கு உண்டு”
எனக் கூறினார்.

சந்திரசேகரன் கொலை செய்யப்பட்டிருக்கும் நேரத்தில்,எம்.எம். மணி இப்படி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,"எம்.எம்.மணியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்'' என கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

ஆனால் மணியின் பேச்சை மறுத்துள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன்,”கட்சியின் எதிரிகளை வீழ்த்துவதற்கு கட்சி ஒரு போதும் ஆள் பலத்தை பயன்படுத்தியது இல்லை. அத்தகைய சக்திகளை பொதுமக்களின் ஆதரவுடன் வீழ்த்துவதற்கு கட்சிக்கு கொள்கை பலம் இருக்கிறது. வன்முறை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அல்ல” என்று கூறியுள்ளார்.