பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

பெருமாள், திருநெல்வேலி.

கழுகார் பதில்கள்

  எல்லாக் கோயில்களிலும் நகைகள் குவிந்திருப்பது ஏன்?

மன்னர்கள் காலத்தில் கோயில்கள்தான் அரசாங்கத்தின் கஜானாக்களாக இருந்தன. அதனால்தான் கோயில்களை கோட்டை​களுக்குத் தேவையான பாதுகாப்புடன் கட்டினார்கள்.

கழுகார் பதில்கள்

தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக சட்டமன்றத்தில்

##~##
பேசும்போது, ''பண்டைக் காலத்தில் நமது அரசர்கள் மதம் வேறு, அரசாங்கம் வேறு என்று நினைக்கவில்லை. கோயில்களைப் பிரார்த்தனை இடங்களாக மட்டும் அல்லாமல், சமூகப் பொருளாதார வாழ்வுக்கும் முக்கியமான இடமாக நினைத்தார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஏராளமான சொத்துகளை இதனால்தான் கோயிலுக்கு எழுதிவைத்தார்கள். இதை விஜய நகர, நாயக்க, மகாராஷ்டிர மன்னர்கள் பின்பற்றினார்கள். இதை முஸ்லிம் மன்னர்களும் பின்பற்றினார்கள் என்பதற்கு உதாரணம்தான் இந்துக் கோயில்களுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் திப்புசுல்தான் கொடுத்த மானியமும் நன்கொடையும்!'' என்று சொன்னார்.

கோயில்களை அரசாங்கம்தான் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே ஓமந்தூரார் இப்படிப் பேசினார்!

 ராஜேஸ்வரன், கோவில்பட்டி.

கழுகார் பதில்கள்

  வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமாரின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?

ஒரு லாக்கப் டெத் தொடர்பாக சதீஷ்குமார் விசாரிக்கச் சென்றதாகவும் ... அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வார்த்தைகள் தடித்து கைகலப்பாக மாறியதாகவும்... இறுதியில் மரணம் சம்பவித்ததாகவும் ஒரு சோர்ஸ் சொல்கிறார். அது எந்த ஸ்டேஷன் என்பதை சி.பி.ஐ-தான் விசாரிக்க வேண்டும்!

 உலகநேசன், சென்னை-10.

கழுகார் பதில்கள்

  குடும்ப ஆட்சியில் வெற்றி கண்டது நேருவின் குடும்பமா... கருணாநிதி குடும்பமா?

பதவி ஆசை இல்லாததுபோல் காட்டிக்​கொண்டே, சுதந்திரம் அடைந்தது முதல் அதிகாரத்தை ருசிப்பது நேரு குடும்பம். பதவி ஆசையை ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டி, மக்களால் ஒதுக்கப்பட்டுவிட்டது கருணாநிதி குடும்பம். இந்த விஷயத்தில் காங்கிரஸிடம் கருணாநிதி பாடம் படிக்க வேண்டும்!

 வீரசிகாமணி, செங்கல்பட்டு.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

  திகார் சிறையில் பணம் கொடுத்தால், எதுவும் கிடைக்குமாமே?

அது என்ன செங்கல்பட்டு சப் ஜெயில் என்று நினைத்தீரா? இப்போது பண முதலைகளின் கோடை வாசஸ்தலமாக அல்லவா இருக்கிறது!

காமன் வெல்த் ஊழல் வழக்கில் கைதான சுரேஷ் கல்மாடி, திகார் சிறை அதிகாரி பரத்வாஜ் அறையில் உட்கார்ந்து ஸ்வீட், காரம், காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது விசாரணை நீதிபதி பிரிஜேஸ் குமார் கார்க் அங்கு திடீர் விசிட் அடித்தார். கல்மாடியும் அந்த அதிகாரியும் திகிலடித்துப்போனார்கள். 'இங்கே ஏன் உட்கார்ந்துள்ளீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார். 'ஆஸ்பத்​திரிக்குப் போவதற்காக இங்கு வந்தேன்’ என்றார் கல்மாடி. 'ஆஸ்பத்​திரிக்குப் போகும்போது, ஸ்வீட் சாப்பிட்டுவிட்டுத்தான் போவீர்களா?’ என்று கேட்ட நீதிபதி, அந்த அதிகாரியை இடம் மாற்ற உத்தரவிட்டார். இப்போது அவர், அந்தமான் சிறைக்குத் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

அரை லட்சம் வரை கொடுத்தால், ஸ்காட்ச் விஸ்கி... சில ஆயிரங்களில் சிகரெட் பாக்கெட்கள் தாராளமாகக் கிடைக்கிறதாம். கெட்டாலும் மேன் மக்கள், மேன் மக்களே!

 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்

  உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால்...?

மேட்டுப்பாளையம் கல்யாணசுந்​தரத்தின் சவாலை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும்!

 மதுரை.துரை, மதுரை.

கழுகார் பதில்கள்

  மத்திய அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டெல்லியில் போய் ஒரு வாரம் தங்கி 3 கேபினெட், 4 துணை மந்திரிகளை அடம்பிடித்து வாங்கி வந்த காலத்தையும் பார்த்தோம். டெல்லியில் இருந்து இங்கே ஒருவர் வந்து, 2 கேபினெட்டுக்கு ஏதாவது பெயரைக் கொடுங்கள் என்று கேட்டும் தர இயலாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

மத்திய மந்திரி பதவிகள் எப்படி மலினமாகிவிட்டன என்பதற்கு இதெல்லாம் சாட்சி!

 முத்துக்குமாரசாமி, ராதாபுரம்.

கழுகார் பதில்கள்

  நில அபகரிப்பைத் தடுக்க தனி போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதே?

இது தி.மு.க-வைப் பழிவாங்கவே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரைக் கைது செய்து கோர்ட்டுக்கு அலையவிடலாமே தவிர, வேறு எதுவும் நடந்துவிடாது. பொருளாதாரக் குற்றப் பிரிவு வளமானது மாதிரி... நில அபகரிப்பு போலீஸ் பிரிவும் இனி ஆகலாம். இந்த டீமுக்குள் செல்ல போலீஸுக்குள்ளேயே போட்டி வரும்!

 கண்ணபிரான், தூத்துக்குடி.

கழுகார் பதில்கள்

இலங்கைக்கு கப்பல் செல்வதை மானமுள்ள தமிழர்கள் தடுக்க வேண்டாமா?

அன்று வ.உ.சி. கப்பல் விட்டதன் மூலம் தமிழனின் மானத்தை உலகறியச் செய்தார். இன்று தமிழனின் கையாலாகத்​தனத்தை காங்கிரஸ் கப்பல்விட்டு சுட்டிக் காட்டுகிறது!

 எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.

கழுகார் பதில்கள்

  தி.மு.க. கூட்டணியில் இருந்து  வெளியேற பா.ம.க. முடிவு செய்து விட்டது போலத் தெரிகிறதே?

அ.தி.மு.க. தனது கூட்டணியில் சேர்க்காது போலவும் தான் தெரிகிறது!

 சுரேஷ் சத்தியேந்திரன், திண்டுக்கல்

கழுகார் பதில்கள்

  பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்கிறார்களே... அது என்ன?

ஓட்டு போட்டவர்கள் பெற்றோர்...

பழிவாங்கப்பட்டுள்ளவர்கள் பிள்ளைகள்!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு