Published:Updated:

ப.சி. சொன்னதன் அர்த்தம் என்ன?

ப.சி. சொன்னதன் அர்த்தம் என்ன?

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அரசியலில் இப்போது 40, 50 வயதுக்காரர் களுக்குப் பதவி தர வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் பதவி விலகலாம்!'' என்று சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லி இருந்தார். அதுபற்றி ஜூ.வி-யில் கருத்துகள் வெளியாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் கவிஞர் 'இலக்கியா’ நடராஜன் நமக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

'உள்துறை அமைச்சர் அளித்த பேட்டியைத் தொடர்ந்து வெளிவரும் செய்திகள், அவரது ஆதரவாளர்

ப.சி. சொன்னதன் அர்த்தம் என்ன?

களாகிய எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைமை சக்தியாக உருவெடுத்து வரும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழருக்கு எதிராகத் திட்டமிட்டு இயங்கி வரும் மறைமுக சக்திகள் இதுபோன்ற தகவல் களைப் பரப்பிவிடுகிறார்கள்.

ப.சிதம்பரம் ஒளிவுமறைவற்ற ஓர் அரசியல்வாதி. எதையும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசுவது அவரது இயல்பு. சமீபத்திய என்.டி.டி.வி. பேட்டியில்கூட, தனது இயக்கம் சார்ந்த கொள்கைகளுக்கு மாறுபட்ட சிந்தனைகொண்ட அருந்ததிராயின் சிறந்த எழுத்தாற் றலைச் சொல்லி, அவரே எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று மனசாட்சி ரீதியான பதிலைச் சொன்னார். அப்படித்தான், 40, 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே முக்கியப் பதவிகள் தர வேண்டும் என்றும் சொன்னார். இது இளைஞர்கள் மீது அவர் காட்டும் அக்கறையின் வெளிப்பாடே தவிர, அவருக்கு ஞான நிலை ஏற்பட்டு அவர் அரசியல் துறவறம் போகப்போவதாக அர்த்தம் அல்ல. 'போகப்போகிற பதவி கௌரவமாகப் போகட்டும்’ என்பதாலும் அல்ல!

பயணம், எழுத்து, படிப்பு... எனத் தன் ஆழ் மனதின் ஆசைகளை வெளியிட்டுள்ளார். அது அவரது பரிமாணங்களின் இன்னொரு கோணமே தவிர, அரசியலைவிட்டு அவரை யாரோ அப்புறப்படுத்தப்போவதன் அடையாள வார்த்தைகள் அல்ல. ஆசியாவின் சிறந்த நிதி அமைச்சராக இரண்டு முறை தேர்ந்தெடுக் கப்பட்டவர் அவர். மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டுத் தர வரிசைப் பட்டியலில் முதல் இடமும் பெற்றவர். அகில இந்திய காங்கிரஸில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கைப் பார்த்து அவர் வகிக்கும் பதவிக்குக் களங்கம் கற்பிக்கச் சிலர் திட்டமிட்டு சொந்தக் கட்சிக்கு உள்ளேயும் பிற அரசியல் கட்சி சூழ்ச்சியாளர்களாலும் சேர்ந்து பின்னப்படுகிற சதி வலையின் வெளிப்பாடுகளாகவே சில தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன!’ என்கிறது அந்தக் கடிதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு