பிரீமியம் ஸ்டோரி
அவசரம்... அவசரம்!

ரமக்குடியில் மாணவர்களின் பை களை சோதனை செய்த கல்வி அதிகாரி, செல்போன், ஆபாசப் புத்தகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறார். மாணவிகளின் பைகளை சோதனை இட்டபோது காதல் கடிதங்கள், செல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இப்படி ஒரு சூழல் மாணவ சமுதாயத்தின ரிடம் ஏற்படக் காரணம், தமிழக அரசுதான். ஆம், வேலை அற்றவன் மூளையில் சாத்தான் குடி இருக்கும் என்பார்கள். அதுபோன்றுதான் நடக்கிறது. என்ன படிப்பது என்று தெரியாமல் மாணவர்களும், என்ன சொல்லித் தருவது என்று தெரியாமல் ஆசிரியர்களும் குழம்பிப்போய் இருக் கிறார்கள். அதனால்தான் புத்தகம் இருக்க வேண்டிய பையில் வேறு என்னென்னவோ இருக்கின்றன.

ஜூன் முதல் வாரமே படிக்கத் தொடங்க வேண்டிய மாண வர்கள், ஜூலை மாதம் முடிவடைய இருக்கும் நிலையிலும் பேருக்காகத்தான் பள்ளிக்குப் போய் வருகிறார்கள். பணம் கட்டிய பெற்றோர்கள் வயிற்று எரிச்சலில் தவிக்க... இளைய மாணவர்கள் சிலர் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்.

சமச்சீர்க் கல்விப் பிரச்னையை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டிய நீதிமன்றம், இன்னமும் எந்த முடிவுக்கும் வர முடியாமல் காலம் தாழ்த்துகிறது. எந்த ஒரு திட்டம் என்றாலும் ஆரம்ப கட்டங்களில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் முறைப்படுத்திக் கொள்வதுதான் சரியான செயல்பாடு என்பது அரசுக்குத் தெரியாதா? தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதத்தை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு முடிவு விரைவில் எடுத்து மாணவ சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்!

- சுப.மோகன், சென்னை.

அவசரம்... அவசரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு