Published:Updated:

ஓ.பி.எஸ் அணியினர் உண்ணாவிரதம்: எழும்பூரில் பன்னீர்செல்வம்

Vikatan Correspondent
ஓ.பி.எஸ் அணியினர் உண்ணாவிரதம்: எழும்பூரில் பன்னீர்செல்வம்
ஓ.பி.எஸ் அணியினர் உண்ணாவிரதம்: எழும்பூரில் பன்னீர்செல்வம்
ஓ.பி.எஸ் அணியினர் உண்ணாவிரதம்: எழும்பூரில் பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில், பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். பொன்னையன், மதுசூதனன், பி.ஹெச்.பாண்டியன் போன்றோரும் எழும்பூரில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஓ.பி.எஸ் அணியினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அணி அமைச்சர்கள் கூறிய தகவலில் திருப்தியில்லை என்று ஓ.பி.எஸ் அணியினர் தெரிவித்துவந்தனர்.
ஓ.பி.எஸ் அணியினர் உண்ணாவிரதம்: எழும்பூரில் பன்னீர்செல்வம்
இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
படங்கள் - வி.ஸ்ரீநிவாசுலு