Published:Updated:

நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Vikatan Correspondent
நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நெல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 124.90 கோடியிலான 822 திட்டங்களையும், குமரி மாவட்டத்தில் ரூ. 22.50 கோடி மதிப்பிலான 174 திட்டங்களையும், நெல்லை மாவட்டத்தில் ரூ. 88.21 கோடியில் 102 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம், 'தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளதே?' எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார். 

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாமிரபரணி-நம்பியாறு-கருமேனி ஆறு நதிகளின் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வறட்சியான பகுதிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தி, நிறைவேற்றித் தரவேண்டும் என நெல்லைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்தகுமார் கோரிக்கை மனு அளித்தார்.

- ஆண்டனிராஜ்