Published:Updated:

பா.வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி மகளிர் தின அசத்தல் கொண்டாட்டம்!

Vikatan Correspondent

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் மகளிர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மகளிர் அணியினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, தங்களுக்குள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பா.வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி மகளிர் தின அசத்தல் கொண்டாட்டம்!

தொடர்ந்து, இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்புக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா.வளர்மதி, அமைப்புச் செயலாளர் எஸ்.கோகுல இந்திரா ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மகளிர் பயன்பெறும் வண்ணம் கம்ப்யூட்டர், லேப்டாப், தையல் மெஷின், இட்லி பானை, அயர்ன் பாக்ஸ் மற்றும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கியதோடு, வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி மகளிர் தினத்தை சிறப்பித்தனர்.

பா.வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி மகளிர் தின அசத்தல் கொண்டாட்டம்!

இந்நிகழ்ச்சியில், மகளிர் அணிச் செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி.,  மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர்களான டி.சகுந்தலா, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் அணி துணை நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.