Published:Updated:

ஆந்திராவில் பிடிபடும் தமிழர்கள் - தி.மு.க, அ.தி.மு.க. நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது தெரியுமா? #Redsandalwood

விகடன் விமர்சனக்குழு
ஆந்திராவில் பிடிபடும் தமிழர்கள் - தி.மு.க, அ.தி.மு.க. நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது தெரியுமா? #Redsandalwood
ஆந்திராவில் பிடிபடும் தமிழர்கள் - தி.மு.க, அ.தி.மு.க. நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது தெரியுமா? #Redsandalwood
ஆந்திராவில் பிடிபடும் தமிழர்கள் - தி.மு.க, அ.தி.மு.க. நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது தெரியுமா? #Redsandalwood

தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீசார் கடந்த 7.4.2015 அன்று செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொன்றனர் அல்லவா?. அன்றைய தமிழகமுதல்வர் ஓ.பி.எஸ், ஆந்திர முதல்வருக்கு இதுகுறித்து எழுதிய கடிதத்தில்,"ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் பலியானது குறித்து நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதற்காக நடத்தப்பட்ட நடவடிக்கையில் பலரும் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு வேளை அவர்கள் சட்டத்துக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, இவ்வளவு பேர்கள் இறந்திருப்பதை பார்க்கும்போது அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன் தான் நடந்ததா என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அவர்கள் சட்ட விரோதமாக மரம் வெட்டுவதில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்களை சுட்டுக்கொல்லாமல் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருக்கலாம்.." என்று சொல்லியிருந்தார்.

அதேபோல், ஆந்திர போலீசாரால் ஆகஸ்ட் 2016-ல் கைது செய்யப்பட்ட  32 தமிழர்களை விடுவிக்கக் கோரி கருணாநிதி எழுதி அனுப்பிய கடிதத்தில்,

"சென்னையில் இருந்து திருப்பதிக்குச் சென்ற 32 தமிழர்கள் அன்றைய தினம் வியாழக்கிழமை இரவே இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், சனிக்கிழமை சப்தகிரி ரயிலில் இவர்களைக் கைது செய்ததாக ரேணிகுண்டா போலீசார், தவறான தகவலை தெரிவித்திருக்கிறார்கள். தமிழக - ஆந்திர எல்லையில் பேருந்துகளிலும், புகை வண்டிகளிலும் பயணம் செய்யும் தமிழர்களை விசாரணை என்ற பெயரால் அடிக்கடி அழைத்துச் சென்று உண்மைக்கு மாறான வழக்குகளை தொடுத்து, பிரச்சனை வளையத்திற்குள் சிக்க வைத்து, சித்ரவதைக்கு ஆளாக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதிக்குப் பயணம் செய்த 32 தமிழர்களைப் பின் தொடர்ந்து சென்ற ரேணிகுண்டா போலீசார்  வெங்கடாபுரம் என்ற இடத்திலே அவர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்பாவித் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிட முன்வருவார் என்று பெரிதும் நம்புகின்றேன். ஆந்திர மாநில போலீசாரும் எதிர்காலத்தில் இவ்வாறு தமிழர்களைக் குறி வைத்து கைது செய்யும் போக்கினைக் கைவிட வேண்டுமென்று மிகுந்த நட்புணர்வோடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்."  என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இருபெரும் கட்சிகளுமே தமிழர்களுக்கான குரலை உயர்த்துவதில் மென்மைப் போக்கையே கடைபிடித்து வந்துள்ளன. இந்தக் கடிதங்களும் அதையேதான் சொல்கின்றன. 'செம்மரம் வெட்டச் சென்று கைது' செய்யப்பட்டவர்களுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினால் அது எப்படி இருக்கும் என்பதையும் வருங்காலத்தில் பார்த்து விடலாம்.

- ந.பா.சேதுராமன்