Published:Updated:

திருச்சி சிவா பேச்சுக்கு பி.ஜே.பி.யினர் எதிர்ப்பு ! ஆங்கிலத்தில் பேசியது தான் காரணமா?

விகடன் விமர்சனக்குழு

ல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை துவக்கி வைக்க மத்திய ரயில்வே அமைச் சர் சுரேஷ் பிரபு இன்று திருச்சி வந்தார். திருச்சி பொன்மலையில் இருந்து டவுன் ரயில் நிலையம் வரையிலான 2.13 கி.மீ தூரத்திற்கு புதியதாக அமைக் கப்பட்ட சரக்கு ரயிலுக்கான புதிய அகல பாதையை அவர் தொடங்கி வைத்தார்.

மேலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் இடையே புதிய இரு வ ழிப் பாதை, விழுப்புரம் - விருத்தாச்சலம் ரயில்நிலையங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு அறைகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும், திருச்சி நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.

திருச்சி சிவா பேச்சுக்கு பி.ஜே.பி.யினர் எதிர்ப்பு ! ஆங்கிலத்தில் பேசியது தான் காரணமா?

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பி.ஜே.பி. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோ கலந்து கொண்டனர். விழாவில் திருச்சி சிவா தாமதமாக வந்தார். திருச்சி சிவா வரும் போது ரயில்வே அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார். ரயில்வே அமைச்சர் திட்டங்களை துவக்கி வைத்து விட்டு பேசத்துவங்கியதால், திருச்சி சிவா பேச அனுமதி கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

ஆனால் ரயில்வே கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும் என திருச்சி சிவா கேட்க... மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதற்கு சம்மதித்தார். இதையடுத்து பேசிய திருச்சி சிவா, ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகளை ஆங்கிலத்தில் பேசினார். இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற பி.ஜே.பி.யினர் தமிழில் பேசுங்கள் என சத்தமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி சிவா பேச்சுக்கு பி.ஜே.பி.யினர் எதிர்ப்பு ! ஆங்கிலத்தில் பேசியது தான் காரணமா?

"அமைச்சருக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தான் பேசுகிறேன். எனக்கு தமிழ் நன்றாக தெரியும். ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் அமைச்சருக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். நான் அரசியல் பேசவில்லை. அரசியல் பேசும் இடம் இது அல்ல என்பது எனக்கு தெரியும். மக்களுக்காக நான் பேசுகிறேன்" எனச்சொல்லி ஆங்கிலத்திலேயே பேசினார். இதற்கிடையே மத்திய அமைச்சருக்கு பின்னால் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை பேச அனுமதித்ததால் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மேடையில் இருந்து எழுந்து செல்ல முற்பட்டார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை அமர வைத்தார்.

திருச்சி சிவா பேச்சுக்கு பி.ஜே.பி.யினர் எதிர்ப்பு ! ஆங்கிலத்தில் பேசியது தான் காரணமா?

விழா முடிந்து திருச்சி சிவா கீழே இறங்கிய போது, பி.ஜே.பி.யினருக்கும், தி.மு.க.வினருக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. 'பாரத் மாதா கீ ஜே' என திருச்சி சிவாவை நோக்கி பி.ஜே.பி.யினர் சத்தமிட... அதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் 'இந்தி ஒழிக' என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, "விழா குறித்து எனக்கு தாமதமாகவே தெரியவந்தது. முறையான அழைப்பு விடுக்கவில்லை. இதனால் இங்கு தாமதமாக வர நேர்ந்தது. அமைச்சருக்கு கோரிக்கைகள் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசினார். மக்கள் பிரச்னைகளைத்தான் நான் பேசினேன். குறுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி.யினர் இப்படி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் இல்லை. வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள்," என்றார்.

செய்தி, படங்கள் :  என்.ஜி.மணிகண்டன்