Published:Updated:

'உ.பி. தோல்வி காயப்படுத்திவிட்டது..!'- காங்கிரஸ் வேதனை

'உ.பி. தோல்வி காயப்படுத்திவிட்டது..!'- காங்கிரஸ் வேதனை
'உ.பி. தோல்வி காயப்படுத்திவிட்டது..!'- காங்கிரஸ் வேதனை
'உ.பி. தோல்வி காயப்படுத்திவிட்டது..!'- காங்கிரஸ் வேதனை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ், 'உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது மிக மோசமான காயப்படுத்தும் தோல்வி' என்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங் கூறுகையில், 'உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது மிக மோசமான தோல்வி. காங்கிரஸை அடிமட்டத்தில் இருந்து மாற்ற வேண்டிய தேவை பற்றி யோசிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

 'காங்கிரஸ்தான் பஞ்சாபில் ஆட்சி அமைக்கிறது. கோவாவிலும், பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாங்கள் அங்கு ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்' என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.