Published:Updated:

நிதின் கட்கரி செயல்பாடு சரி இல்லை அத்வானி கடும் தாக்கு!

விகடன் விமர்சனக்குழு
நிதின் கட்கரி செயல்பாடு சரி இல்லை அத்வானி கடும் தாக்கு!
நிதின் கட்கரி செயல்பாடு சரி இல்லை அத்வானி கடும் தாக்கு!
நிதின் கட்கரி செயல்பாடு சரி இல்லை அத்வானி கடும் தாக்கு!

புதுடெல்லி:உத்தரப் பிரதேசத் தேர்தலையும், ஜார்க்கண்ட், கர்நாடக விவாகரங்களையும்  பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி சரியாகக் கையாளவில்லை என்று அக்கட்சியின் மூத்த  தலைவ எல்.கே. அத்வானி குறை கூறியுள்ளார்.

தனது ’பிளாக்’கில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அத்வானி,பா.ஜனதாவில் தற்போதைய சூழ்நிலை உற்சாகமளிக்கக்கூடியதாக இல்லை.உத்தரப்பிரதேச தேர்தலின்போது பகுஜன்  சமாஜ் கட்சியிலிருந்து மாயாவதியால் வெளியேற்றப்பட்டவர்களை பா.ஜனதா   வரவேற்றதும், ஜார்க்கண்ட்,கர்நாடக விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடும் ஊழலுக்கு எதிரான பா.ஜனதாவின் பிரசாரத்தை மட்டுப்படுத்திவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம்  சுஷ்மா மற்றும் அருண்ஜெட்லிக்கு பாராட்டு தெரிவித்துள்ள அத்வானி,
”1984-ல் பாஜகவுக்கு 2 எம்பிக்களே இருந்தனர்.தற்போது குறிப்பிடத்தக்க அளவில்  எம்பிக்களைப் பெற்றுள்ளோம்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அருண்ஜேட்லி,  சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் பணிகள் சிறப்பாக உள்ளன.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது கோபத்தில் உள்ள மக்கள்  நமது கட்சியின் மீதும் அதிருப்தியில் உள்ளனர் என நான் முன்பே தெரிவித்திருந்தேன்.  எனவே கட்சியின் நிலைமையை நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்”  என அத்வானி மேலும் குறிப்பிட்டுள்ளார்.