பிரீமியம் ஸ்டோரி
அணு ஆட்டம்!

அணு விபத்து இழப்பீடு எனும் மோசடி! 

தே மலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்

சித்தத்திலே சேர்ப்போம்;

'சேமம் எல்லார்க்கும்’ என்றே சொல்லிப் பேரிகை

செகம் முழக்கிடுவாய்!

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  

##~##

யங்காத துறையின் இயலாத அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, 2007 பிப்ரவரி மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி

அணு ஆட்டம்!

558 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில்

அணு ஆட்டம்!

300 மத்திய அரசு தரும், மீதித் தொகையை அணு மின் நிலையம் தரும்’ என்று சொல்லி இருந்தார்.

கூண்டோடு கைலாசம் போகிறவர்களுக்கு குழுக் காப்பீடு எப்படி உதவும்? அணு மின் நிலையம் வெடித்தால், உடுத்தி இருக்கும் துணி யோடு ஊரைவிட்டு ஓடுபவர்கள், இன்ஷூரன்ஸ் பாலிசி எங்கே என்று தேடிக்கொண்டா இருப்பார்கள்? ஒருவேளை பாலிசி கையில் இருந்தால்கூட, கதிர் வீச்சு காரணமாக முகம் கருகி, உடல் கரிந்து, வாந்தி எடுத்து, பேதியாகிப் பேதலிக்கும்போது, இந்த இன்ஷூரன்ஸ் தொகையை யார் போய், எப்படி வாங்குவது? கண்களை இழந்தவனுக்கு கைகள் நிறையச் சித்திரங்கள் கொடுப்பதால் என்ன பயன்? ஆழமான இந்தக் கேள்விகளுக்கு ஆற்காட்டார் பதில் அளிக்க முடியாமல் பரிதவித்தார்.

அணு ஆட்டம்!

இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், இந்திய அரசு இழப்பீடுச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று ஏவிக்கொண்டு இருந்தது அமெரிக்கா. அணு சக்தி இழப்பீடு சட்ட முன்வரைவு, மத்திய அமைச்சரவையால் நவம்பர் 20, 2009 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. வழக்கம்போலவே மக்கள் விரோத மன்மோகன் சிங் அரசு இந்த சட்ட முன்வரைவை மக்களிடம் இருந்து மறைத்து வைத்தது.

மார்ச் 10, 2010 அன்று காங்கிரஸ் அரசு அவசர கதியாக இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அணு ஆட்டம்!

தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதால், வாக்கெடுப்பு நடத்த வேண்டி வரும் என்பதாலும், அப்படி வாக்கெடுப்பு நடத்தி னால் 'முதலுக்கே மோசம்’ வரலாம் என்ப தாலும், அந்த முன்வரைவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது அரசு!

28 பக்கங்களும், ஏழு பகுதிகளும், 49 ஷரத்துகளும்கொண்ட இழப்பீடு சட்ட வரைவு மூன்று நோக்கங்களைக்கொண்டது. அணு மின் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது, இழப்பீடு கோரல்களுக்கு இயக்குநரை நியமிப் பது, மற்றும் கோரல்களுக்கான இயக்ககம் தோற்றுவிப்பது.

இந்த சட்ட வரைவில் காணப்பட்ட பல பிரச்னைகளுள் ஒன்று, தனியார் நிறுவனங்கள் வெறும் லாப நோக்கோடு அணு மின்சாரத் தயாரிப்பில் நுழைய வழி வகுப்பது. இந்திய அணு மின் நிலையங்கள் அனைத்தும் இதுவரை இந்திய அரசின் அணு மின் கழகமான என்.பி.சி.ஐ.எல். மூலமே நிறுவப்பட்டும் இயக்கப்பட்டும் வருகின்றன. இதற்குள்ளேயே எத்தனையோ பிரச்னைகள் இருக்கும் நிலையில்... தனியாரையும் உள்ளேவிடுவது சரிதானா என்பது விவாதத்துக்கு உரியது. மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனமே, எந்தத் தகவலையும் மக்களுக்குத் தராமல் தான்தோன்றித்தனமாக இயங்கும்போது, லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்யும்... எப்படி எல்லாம் இயங்கும்? அணு மின் நிலையம்போன்ற மிகுந்த ஆபத்தான தொழிற்சாலைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது, பேரிடர்களை வருந்தி அழைப்பதுபோன்றது. சுயமாக இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஏதுமற்ற நிலையில், இது இன்னும் ஆபத்தாகவே அமையும்.

இந்தச் சட்ட வரைவு அணு மின் விபத்து இழப்பீட்டுக்கு உச்சக்கட்ட வரம்பை நிர்ணயித்தது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது, கூடாதது. ஒரு தீ விபத்து இழப்பீடு நிர்ணயம் என்றால், என்னென்ன பொருட்கள் எரிந்து சாம்பலாகும், எவ்வளவு இழப்பு வரும், எப்படி உச்ச வரம்பை நிர்ணயிக்கலாம் என்பனவற்றை லகுவாக முடிவு செய்யலாம். ஆனால் அணு மின் விபத்து எண்ணற்ற வழிகளில், எத்தனையோ தலைமுறைகளை, எப்படி எல்லாமோ பாதிக்கிற விஷயம், இதற்கு எப்படி உச்சவரம்பு நிர்ணயிப்பது?

அரசு சார்ந்த அணு மின் நிறுவனத்துக்கு உச்ச வரம்பு

அணு ஆட்டம்!

2,100 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அமெரிக்க டாலரில் கணக் கிட்டால், இது 450 மில்லியன் டாலராக இருக்கும். 1986 ஏப்ரல் மாதம் நடந்த செர்னோபில் அணு மின் நிலைய விபத்தின் காரணமாக அண்டை நாடான பெலரூஸ் 1991 முதல் 2003 வரையிலான 13 ஆண்டு காலகட்டத்துக்குள் மட்டுமே 13,000 மில்லியன் டாலர் நிவாரணப் பணிகளுக்காக செலவு செய்து இருக்கிறது. இதில் இருந்தே, 450 மில்லியன் டாலர் இழப்பீடு என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போன்றது என்பது புலப்படும். அரசு சாராத அணு மின் நிறுவனம் வழங்கும் இழப்பீடு அதிகபட்சமாக

அணு ஆட்டம்!

500 கோடியாகவும், குறைந்த பட்சமாக

அணு ஆட்டம்!

100 கோடியாகவும் இருக்கும் என வரையறுத்தது சட்ட வரைவு. மத்திய அமைச்சரவை நிர்ண யித்த

அணு ஆட்டம்!

300 கோடி உச்சவரம்பு

அணு ஆட்டம்!

500 கோடியாக உயர்த்தப்பட்டாலும், குறைந்தபட்சத் தொகை மாற்றப்படாதது மோசடி என்றே எண்ணத் தோன்றியது.

அணு உலை இயக்குபவர் வழங்கவேண்டிய இழப்பீட்டைப்பற்றி மட்டுமே பேசிய சட்ட வரைவு, உபகரணங்கள் வழங்குபவர், அணு மின் நிலையம் கட்டுபவர் போன்றோர் வழங்க வேண்டிய இழப்பீடுபற்றி வாய் திறக்கவே இல்லை. இது அமெரிக்க கம்பெனிகளை பாதுகாப்பதற்கான அப்பட்டமான முயற்சி என்றே தோன்றியது.

இயக்குபவர் மட்டுமே இழப்பீடு வழங்குவது என்றால், இன்றைய நிலையில் இந்தியாவில் என்.பி.சி.ஐ.எல். நிறுவனம் மட்டுமே அணு மின் நிலையங்களை இயக்குகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இது மக்கள் வரிப் பணத்தில் இயக்கப்படும் ஒரு பொதுத் துறை நிறுவனம். இந்திய அரசு நம் மக்கள் பணத்தை எடுத்து நமது மக்களுக்கே இழப்பீடு வழங்கிக்கொண்டு இருக்க, அமெரிக்க கம்பெனிகள் கையில் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஜூட் விடலாம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஏற்பாடு. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, வரத்தை எல்லாம் வாங்கிக்கொள்ள முனைவது என்ன நியாயம்?

இவை எல்லாவற்றையும்விட வேடிக்கையானது, இழப்பீடு வழங்கப்பட வேண்டிய கால கட்டத்தை 10 வருடங்கள் என்று குறிப்பிட்டது. அணு மின் நிலைய விபத்து ஆண்டாண்டு காலமாய் அவதிக்கு உள்ளாக்கும்போது, 10 வருடங்கள் மட்டுமே இழப்பீடு வழங்குவது பைத்தியக்காரத்தனமானது. இத்தனை ஓட்டைகளை உள்ளடக்கிய சட்ட வரைவை சட்டமாக்கி, சிட்டாகப் பறந்து வாஷிங்டன் எஜமானர்களை மகிழ்விக்கத் துடித்த மன்மோகன் சிங் அரசு, தனது சிந்தனைகளில், செயல்பாடுகளில், சராசரி இந்தியக் குடிமகனின் பாதுகாப்புக்கு, நல் வாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்காதது பெரும் துரதிர்ஷ்டம்!

அணு ஆட்டம்!

 அன்பு செல்வம்

கல்பாக்கத்திலும் தாராபூரிலும் உள்ள அணு மின் நிலையங்களில் பணி ஆற்றியவர். அணு உலைப் பராமரிப்பில் ஈடுபட்டு அணுக் கதிர் வீச்சின் அபாயத்தை நேரடியாக உணர்ந்தவர் என்பதால், அது குறித்த விழிப்பு நிலையை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லியும், எழுதியும் வருகிறார். 2000-ம் ஆண்டு கல்பாக்கத்தில் இருந்து கூடங்குளம் வரை நகரப் பேருந்தின் மூலம் ஓர் அணு எதிர்ப்புப் பிரசாரத்தை 'அரசரடி மனித உரிமைக் குழு’வுடன் மேற்கொண்டவர். மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணியாற்றிய அன்பு செல்வம், புதுச்சேரியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்!

- அதிரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு