Published:Updated:

காவல் துறை அதிகாரிகளுக்கு காவல் எதுக்கு?

காவல் துறை அதிகாரிகளுக்கு காவல் எதுக்கு?

பிரீமியம் ஸ்டோரி
காவல் துறை அதிகாரிகளுக்கு  காவல் எதுக்கு?

மிழகக் காவல் துறையில் பணிபுரியும் உயர்  அதிகாரிகளுக்கு சுமார்  10 காவலர்கள், எப்போதும் கூடவே இருப்பது ஏன்?

காவல் நிலையங்களிலும், கடுமையான போக்குவரத்து நிலவும் இடங்களிலும் காவலர் களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தச் சூழலில், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு எதற்காக இத்தனைப் பாதுகாவலர்கள்? கலவரப் பகுதி அல்லது சிக்கல் நிறைந்த விசிட்களுக்குச் செல்லும் சமயத்தில் என்றால், இத்தனை பாதுகாவலர்களுடன் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியும். கோயிலில் சாமி கும்பிடச் செல்வதாக இருந்தாலும், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதாக இருந்தாலும், சினிமா தியேட்டருக்குச் செல்வதாக இருந்தாலும், 10 பேர் புடை சூழ குட்டி ராஜாக்கள் போன்று அதிகாரிகள் செல்வது என்ன நியாயம்? இவர்களுடைய பாதுகாப்புக்கு என்ன அச்சம் இருக்கிறது? இதற்காகச் செலவிடப்படும் பணத்துக்கு யார் பொறுப்பு?

மக்களைப் பாதுகாக்க வேண்டிய புனிதமான பதவியில் இருப்பவர்கள், தங்கள் பாதுகாப்புக்காக இத்தனை நபர்களின் உழைப்பை உறிஞ்ச வேண்டுமா? வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில், இந்திய மக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை இன்று வரை தொடர்வது நியாயம்தானா? வீரமுள்ள, தைரியமுள்ள காவல் துறை அதிகாரிகள், தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளட்டும்!

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

காவல் துறை அதிகாரிகளுக்கு  காவல் எதுக்கு?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு