Published:Updated:

'பிளாஸ்டிக்கை ஒழிக்க கடைகளுக்கு துணிப்பை'

'பிளாஸ்டிக்கை ஒழிக்க கடைகளுக்கு துணிப்பை'
'பிளாஸ்டிக்கை ஒழிக்க கடைகளுக்கு துணிப்பை'
'பிளாஸ்டிக்கை ஒழிக்க கடைகளுக்கு துணிப்பை'

சென்னை:பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,பொதுமக்கள் கடைகளுக்கு  போகும்போது கையோடு ஒரு துணிப்பை கொண்டு போகும் பழக்கத்தை பின்பற்ற  வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”பிளாஸ்டிக் பை எனப்படும்  நெகிழிப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு செய்கின்றன.பிளாஸ்டிக் சாலை  அமைப்பதன் மூலம் இக்கேட்டினை ஒழிக்க முடியாது.குப்பையில் இருந்து மின்சாரம்  தயாரிப்பதும் இதற்கு தீர்வு அல்ல.

எனவே பசுமை பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான குப்பை ஒழிப்பில் தமிழ்நாடு  அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் தீவிரம் காட்டி தமிழ்நாட்டை குப்பை-  மாசுபாடு இல்லாத மாநிலமாக மாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இந்த இந்த முயற்சிக்கு பொதுமக்களும் துணை நிற்க வேண்டும்.எனவே, இனியும்  தாமதிக்காமல் தமிழ்நாடு அரசும்,மாநகராட்சிகளும், நகராட்சிகளும் சட்டவிதிகளை  முழுமையாகச் செயல்படுத்தவேண்டும்.பொதுமக்கள் கடைகளுக்கு போகும்போது  கையோடு ஒரு துணிப்பை கொண்டு போகும் பழைய பழக்கத்தை மீண்டும் பின்பற்ற  வேண்டும்.அதன் மூலம் பிளாஸ்டிக்களை முற்றிலுமாக தவிர்க்க சுற்றுச்சூழல் நாளில்  உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.