Published:Updated:

மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: டி.ராஜேந்தர்

மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: டி.ராஜேந்தர்
மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: டி.ராஜேந்தர்
மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: டி.ராஜேந்தர்

மதுரை: இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றில்  தமிழக மக்களை திமுக தலைவர் கருணாநிதி ஏமாற்றுவதாக லட்சியத் திராவிட  முன்னேற்றக் கழகத் தலைவரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து,தமது கட்சி சார்பில் மதுரை தலைமை அஞ்சல்  நிலையம் அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,”
இதுவரை காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது முதல் 39 முறை பெட்ரோல் விலை  உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசில் அங்கம் வகித்திருக்கும் திமுகவும்,பெட்ரோல் விலை  உயர்வுக்கு பொறுப்பாகும்.

இலங்கையில் தமிழர்கள்,அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டபோது,மத்திய அரசில்  திமுகவும் இடம் பெற்றிருந்தது.அப்போது,இலங்கைத் தமிழரைக் காப்பாற்றும் வகையில்  மத்திய அரசிலிருந்து விலகுமாறு திமுகவைக் கோரினோம்.

ஆனால்,பதவிக்காக கருணாநிதி மத்திய அரசிலிருந்து விலகவில்லை.இதனால், பல  லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.இப்போது இலங்கைத்  தமிழர் உரிமைக்கு போராடுவதாக கருணாநிதி கூறுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது.

அதேபோல,பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு,அந்த அரசில் இடம்  பெற்றுள்ள திமுகவும் காரணமாக உள்ளது.ஆனால்,பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பது  போலப் பேசி மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார்.

உண்மையிலேயே மக்களுக்காக கருணாநிதி போராடுகிறவர் என்றால் மத்திய அரசில்  அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்கள் பதவியை விட்டு விலகவேண்டும்” என்றார்.