Published:Updated:

தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சகாயராஜ் மு
தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாளாம் "யுகாதி" திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மொழி பாகுபாடின்றி தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் பயன்பெற பல்வேறு நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், பன்மொழி பேசும் மக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக வாழும் பெருமையுடன் தமிழ்நாடு விளங்குகிறது.  

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் பேணிக் காத்திடும் அதேவேளையில்,
பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இணைந்து தொழில், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன், தமிழக மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், இப்புத்தாண்டில் எல்லா வளங்களையும், நலங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.