Published:Updated:

2,000 டாஸ்மாக் கடைகள் என்னவாகும்? முடிவு செய்கிறது உச்சநீதிமன்றம்

2,000 டாஸ்மாக் கடைகள் என்னவாகும்? முடிவு செய்கிறது உச்சநீதிமன்றம்

2,000 டாஸ்மாக் கடைகள் என்னவாகும்? முடிவு செய்கிறது உச்சநீதிமன்றம்

2,000 டாஸ்மாக் கடைகள் என்னவாகும்? முடிவு செய்கிறது உச்சநீதிமன்றம்

2,000 டாஸ்மாக் கடைகள் என்னவாகும்? முடிவு செய்கிறது உச்சநீதிமன்றம்

Published:Updated:
2,000 டாஸ்மாக் கடைகள் என்னவாகும்? முடிவு செய்கிறது உச்சநீதிமன்றம்

''தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுபான விற்பனைக் கடைகளால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இந்தக் கடைகளை அகற்ற வேண்டும்'' என்று வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 'தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கடைகளை அகற்ற வேண்டும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குக் கடைகளை அமைக்கக் கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால், தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட கடைகளை மூடவேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற ஒப்புக்கொண்ட தமிழக அரசு, '500 மீட்டருக்கு-க்கு அப்பால் கொண்டுசெல்ல வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 'தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்கு அப்பால் என்பதற்குப் பதில், 100 மீட்டர் என்று மாற்ற வேண்டும்' என்று டாஸ்மாக் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 6,674 பேர் லைசன்ஸ் தற்காலிக ரத்து செய்யப்பட்டது மற்றும் 1,607 பேர் லைசன்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் கடைகளுக்கு மார்ச் 31 வரை அளிக்கப்பட்ட அனுமதியைப் புதுப்பிக்கக் கூடாது, கடைகளை நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும்' என்று டிசம்பரில் உத்தரவிட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுவரை, தமிழ்நாடு அரசு பிரச்னையாக இருந்தது, தற்போது தேசியப் பிரச்னையாக மாறிவிட்டது. பல மாநில அரசுகள், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. பல மாநிலங்களில் பெரும்பாலான மதுக்கடைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, கோவா, புதுச்சேரி போன்ற சிறிய மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

''உச்ச நீதிமன்றம் 500 மீட்டருக்குள் கடை இருக்கக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருப்பது குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது'' என்கின்றனர் பல்வேறு மாநிலங்களின் மதுக்கடை உரிமையாளர்கள். கோவாவில், ஊருக்கு அருகில் ஒரு கடை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் இந்த ஊர் அமைந்திருக்கிறது. ஆனால், இந்த ஊருக்குள் வர வேண்டும் என்றால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கி.மீ பயணம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இந்தக் கடையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மதுக்கடைகள் என்றால், நட்சத்திர உணவக பார்கள், பப் உள்ளிட்டவையும் இதில் இடம் பெறுமா என்றும் பல மாநிலங்கள் சார்பில் விளக்கம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்த திங்கட்கிழமை (27-ம் தேதி) தீர்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகவில்லை. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை, மத்திய அரசு வழக்கறிஞர் சார்பில் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றத்தில்  நினைவூட்டியபோது, இன்று (29-03-17) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இன்று, மதியத்துக்கு மேல் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

- பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism