Published:Updated:

"ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்!"

"ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்!"
"ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்!"
"ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்!"

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன் என்று கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,அவர் அளித்த பதில்களும் வருமாறு:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருக்கிறாரே,என்ன காரணம்?

டெல்லிக்குப் போகக்கூடாதா என்ன?


ஜனாதிபதி தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே இங்கே வந்த மத்திய அமைச்சர் அந்தோணியிடம் விளக்கியிருக்கிறோம்.உங்களிடமும் அதைப்பற்றி ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன்.


சேலத்தில் ராஜேந்திரன் அணியினருக்குத்தான் கட்சியில் பதவி தருவதாகவும் வீரபாண்டி அணியினரை புறக்கணிப்பதாகவும் சொல்கிறார்களே?

அதெல்லாம் உங்கள் பத்திரிகை செய்திகள்.நாட்டு நடப்பு அல்ல.


கி.வீரமணி ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

அது அவருடைய கருத்து.அதில் நான் அவருடன் முரண்படவில்லை.


உள்கட்சித் தேர்தலில் நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா?

இப்போது தேர்தல் நடக்கவில்லை.இன்னும் ஓராண்டு இருக்கிறது.


ஓராண்டுக்குப் பிறகு?

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்" என்று கூறினார்.