Published:Updated:

’தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை’ : பொன்.ராதாகிருஷ்ணன்

அஸ்வினி.சி
’தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை’ : பொன்.ராதாகிருஷ்ணன்
’தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை’ : பொன்.ராதாகிருஷ்ணன்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை என்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

’தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை’ : பொன்.ராதாகிருஷ்ணன்


 

டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 19 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த  காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

’தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை’ : பொன்.ராதாகிருஷ்ணன்


 

தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். மத்திய அரசு  விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர்.

’தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை’ : பொன்.ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், ”விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி இல்லை. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு தவறிவிட்டது. மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றினாலே விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும். நதிகளை இணைக்க முடியாது என்று கூறியவர்தான் ராகுல்காந்தி. அவருக்கு விவசாயிகள் பிரச்னை குறித்து பேசவே தகுதி இல்லை”, என்று கடுமையாக சாடி உள்ளார்.