Published:Updated:

கூடுதல் விலைக்கு மது விற்பனை; 852 டாஸ்மாக் ஊழியர்கள்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை! - அதிரடி தொடருமா?

டாஸ்மாக்

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,970 நபர்கள் பணியிட மாற்றமும், 852 நபர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றனர்.

கூடுதல் விலைக்கு மது விற்பனை; 852 டாஸ்மாக் ஊழியர்கள்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை! - அதிரடி தொடருமா?

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,970 நபர்கள் பணியிட மாற்றமும், 852 நபர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
டாஸ்மாக்

தமிழ்நாட்டில் 5,380 டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைந்து 3,240 பார்களும் இயங்கி வருகின்றன.  டாஸ்மாக்  கடைகள் மூலம் நாள்தோறும் ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் விழாக்காலங்களில் இரட்டிப்பாகும். குறிப்பாக, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடிக்கும் மேலும் விற்பனை நடைபெறும். 2021-22-ம் ஆண்டில் மட்டும் ரூ.36 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. எனவே, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமானதாகத் திகழ்கிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கடந்த சில மாதங்களாகவே பல மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வந்தவண்ணமாக இருந்தன. இந்தப் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, திடீர் ஆய்வுப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுவந்தார்கள். இந்த ஆய்வின்போது ஊழியர்களின் வருகை, விற்பனை விவரம், மதுபான இருப்பு குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது. வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் திடீர் ஆய்வுகள் நடந்தன.   

அந்த வகையில், கடந்த ஆண்டு, ஜூன் முதல் அக்டோபர் 2022 வரை டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து ரூ.4.61 கோடி அபராதத் தொகையை டாஸ்மாக் வசூலித்திருக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,970 நபர்கள் பணியிடமாற்றமும், 852 நபர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  டெண்டர் நடைபெறாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்ட  பார்களிலிருந்து 14,334 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 798 வழக்குகள் காவல்துறையில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "திடீர் ஆய்வுப் பணிகளை விரைவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. மாவட்ட மேலாளர்களை மாவட்டம்விட்டு மாவட்டம் மாற்றி ஆய்வுப் பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை என ஐந்து மண்டலங்களில் தொடர்ச்சியாக இந்த ஆய்வுப்பணிகள் நடைபெறும்" என்றனர்.