Published:Updated:

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, 'மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக டிஜிபி-க்கு கடிதம் ஒன்றையும் அளித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு, தற்போது மாநில பாதுகாப்புப் படைப் பிரிவு தான் பாதுகாப்பு வழங்கிவருகிறது. மார்ச் 21-ம் தேதி, 'தனக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கேட்டு, ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடித்தத்தை, பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்பி-க்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அளித்தனர். தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்றும் பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல்கள் வருகிறது என்றும் பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்தனர். இதையடுத்து, 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக டிஜிபி-க்கு கடிதம் ஒன்றையும் அளித்துள்ளது.