Published:Updated:

புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம் !

புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம் !
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம் !
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம் !

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்கிறார்.

புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 12 ம் தேதியன்று  நடைபெற உள்ள நிலையில்,அங்கு நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதனால் புதுக்கோட்டையில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில்  அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து ஜெயலலிதா இன்று  பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை வரும் அவர்,  புதுக்கோட்டை தொகுதிக்கு உள்பட்ட கறம்பக்குடி ஒன்றியம், புதுப்பட்டியில்  அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இறங்கி,அங்கிருந்து தனது  பிரசாரத்தைத் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்  முதல்வரின் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் தற்போது இந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பயண திட்டத்தின் படி தனி விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வர், அங்கிருந்து வேன் மூலம் ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை செல்ல உள்ளார். இதனால் அந்த வழித்தடத்தில் உள்ள பாலங்கள் அனைத்திலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 பிரசார வாகனம் மூலம் மழையூர்,சம்மட்டிவிடுதி நால்ரோடு, மாத்தூர்,  இச்சடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்யும் அவர்,புதுக்கோட்டை நகரில்  பிருந்தாவனம்,அண்ணா சிலை, திருக்கோகர்ணம் மியூசியம் ஆகிய பகுதிகளில் பிரசாரம்  செய்கிறார். இறுதியாக, டிவிஎஸ் கார்னர் பகுதியில் தனது பிரசாரத்தை அவர் நிறைவு  செய்கிறார்.

இந்தப் பிரசாரத்தின் போது,அவர் சுமார் 43 கி.மீ. தொலைவு சுற்றுப் பயணம்  மேற்கொள்ள உள்ளார்.