Published:Updated:

விருப்பம் இருந்தால் மட்டும் ஜனாதிபதி ஆகிவிட முடியாது: பிரணாப்

விகடன் விமர்சனக்குழு
விருப்பம் இருந்தால் மட்டும் ஜனாதிபதி ஆகிவிட முடியாது: பிரணாப்
விருப்பம் இருந்தால் மட்டும் ஜனாதிபதி ஆகிவிட முடியாது: பிரணாப்
விருப்பம் இருந்தால் மட்டும் ஜனாதிபதி ஆகிவிட முடியாது: பிரணாப்

கொல்கத்தா: வெறும் விருப்பத்தால் மட்டுமே ஒருவ்ரால் ஜனாதிபதி ஆகிவிட முடியாது  என்று மத்திய நிதியமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப்  முகர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரணாப்பிடம்,ஜனாதிபதி பதவிக்கான  காங்கிரஸ் வேட்பாளராக உங்களது பெயர் அடிபடுகிறதே எனக் கேட்டபோது,”நீங்கள்  விரும்பியதால் மட்டுமே உங்களால் ஜனாதிபதியாகிவிட முடியாது;ஜனாதிபதி பதவிக்கான  வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும்”என்று பதிலளித்தார்.

முன்னதாக ஜனாபதி பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிதான் என நேற்று  டெல்லி வட்டாரத்தில் செய்தி பரவியது.

இதன் காரணமாகவே செய்தியாளர்கள் இன்று மேற்கூறிய கேள்வியை பிரணாப்பிடம்  எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பிரணாப் பிடிகொடுக்காமல் பதிலளித்தாலும்,வருகிற 13 அல்லது 15 ம்  தேதி வாக்கில் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்கும்போது பிரணாப்  பெயர்தான் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை குறையும்

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பிரணாப், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதால் உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.