Published:Updated:

ஜனாதிபதி தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மம்தா முடிவு!

விகடன் விமர்சனக்குழு
ஜனாதிபதி தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மம்தா முடிவு!
ஜனாதிபதி தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மம்தா முடிவு!
ஜனாதிபதி தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மம்தா முடிவு!

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு கூட்டணி  கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஆட்சேபணை  தெரிவிக்க மாட்டார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குவங்க மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும்,எனவே தனது  மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய  அரசை மம்தா வலியுறுத்தி வந்தார்.

ஆனால் அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவிற்கு தற்போதைய பொருளாதார  சூழ்நிலை அனுமதிக்கவில்லை என்பதுமட்டுமல்ல,விதிமுறைகளும் அதை அனுமதிக்காது  என்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதனால் பிரணாப் மீது மம்தா அதிருப்தியடைந்தார்.இதன் காரணமாக ஜனாதிபதி  பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரணாப்  நிறுத்தப்பட்டால்,அவரை மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரிக்குமா என்ற சந்தேகம்  எழுந்தது.

இந்நிலையில்,மம்தாவை  காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்திவிட்டதாகவும்,ஜனாதிபதி  தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு அவர் ஆட்சேபணை எதுவும்  தெரிவிக்கமாட்டார் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.