Published:Updated:

ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக  வெற்றி பெறும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவ்ர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில், ”சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக 68 ஆயிரம் ஓட்டு  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒரு லட்சம் ஓட்டுகள்  வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவது உறுதி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே செல்லாயிபுரம் மில் தொழிலாளி ராஜா  என்பவர் போலீசாரின் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு  இறந்துள்ளார்.இறந்த ராஜாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவி தொகை வழங்க  வேண்டும். வரது மரணத்திற்கு தொடர்பு உடைய போலீசாரை சஸ்பெண்டு செய்ய  வேண்டும்” என்றார்.