Published:Updated:

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

விகடன் விமர்சனக்குழு
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டிற்கு மாதம் 52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயல்லிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,”மத்திய அரசு  தமிழகத்திற்கென மாதந்தோறும் 65140 கி.லிட்டர் மண்ணெண்ணை வழங்கி  வந்தது.இது கடந்த ஏப்ரல்-மே 2011-ல் 52,806 கி.லிட்டராக குறைக்கப்பட்டது.

ஜூன் 2011-ல் 44,580 கி.லிட்டராக மேலும் குறைக்கப்பட்டது. அதிமுக அரசு  பதவியேற்ற பின், எவ்வித முன்னறிவிப்புமின்றி,தகுந்த காரணங்களுமின்றி ஏப்ரல்  2012-ல் 39, 429 கி.லிட்டராக குறைக்கபட்டுள்ளது.இதனால் தமிழக மக்களுக்கு  மண்ணெண்ணை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு மாதம் ஒன்றிற்கு 65,140 கி.லிட்டர் மண்ணெண்ணை  தேவைப்படுகிறது. இதை தீர்க்க வேண்டி, குறைந்தது மாதந்தோறும் 52, 806  கி.லிட்டர் மண்ணெண்ணையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.