Published:Updated:

அரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்

விகடன் விமர்சனக்குழு
அரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்
அரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்
அரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்

லக்னோ: ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுபவர் அரசியல் பின்னணி கொண்டவராக  இருக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்  வலியுறுத்தியுள்ளார்.

லக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த  அவர்,ஜனாதிபதி பதவிக்கு அதிகாரியாக பணியாற்றியவரை நியமிக்கப்படுபவரை தாங்கள்  கட்சி விரும்பவில்லை என்றார்.

ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்துமா  என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி  இதுவரை தங்களை தொடர்புகொள்ளவில்லை என்றும்,வேட்பாளர் யார் என்பது குறித்த  அறிவிப்பு வெளியான பின்னரே தங்களது கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது பற்றி  முடிவெடுக்கப்படும் என்றும் முலாயம் தெரிவித்தார்.