Published:Updated:

தொப்பி வியாபாரம்... சிரிப்பு வித்தை..! அரசியல் கட்சிகளுக்கு ரிலாக்ஸ் டிப்ஸ்

தொப்பி வியாபாரம்... சிரிப்பு வித்தை..! அரசியல் கட்சிகளுக்கு ரிலாக்ஸ் டிப்ஸ்
தொப்பி வியாபாரம்... சிரிப்பு வித்தை..! அரசியல் கட்சிகளுக்கு ரிலாக்ஸ் டிப்ஸ்

ஆர்.கே நகர் தேர்தலை ரத்து பண்ணியாச்சு. மறுபடியும் எப்போ தேர்தல் வைப்பாங்கனு மக்களுக்கும் தெரியலை; வேட்பாளர்களுக்கும் தெரியலை, அவ்வளவு ஏன் தேர்தல் ஆணையத்துக்கே தெரியுமான்னு தெரியலை. சரி இந்த கேப்ல கட்சிக்காரர்கள்லாம் என்ன பண்ணலாம்னு சில ஜலபுல ஐடியாஸ்...

* இதுல நொந்து நூலான முதல் ஆடு டி.டி.வி. தினகரன்தான் ஏன்னா அவங்க கேங்ல உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் ரெய்டுல மாட்டுனதுதான் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு சொல்லப்படுகிற காரணங்களிலேயே ஹைலைட்டான விசயம். சரி... அது இருக்கட்டும். விஷயத்துக்கு வருவோம். இருக்கிற கேப்பில் என்னத்தை பண்ணுறது? பிரசாரத்துக்கு வாங்கி வெச்ச தொப்பிகளையெல்லாம் அடிக்கிற வெயிலுக்கு அஞ்சு ரூபா பத்து ரூபா எனக் கடை போட்டு விற்று கல்லா கட்டலாம்.

* சம்மர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சட்டையைக் கழட்டி கூலாக வலம்வந்த ஸ்டாலின் தேர்தல் நிறுத்தப்பட்டதால் இன்னும் கூலாகத்தான் இருப்பார் என நம்பப்படுகிறது. அடுத்த தேர்தல் வரும்வரைக்கும் குத்த வெச்சே உட்கார்ந்திருக்காமல் கட்சிக்காரர்களை விட்டு அ.தி.மு.க. கேங்குகளுடன் சிரித்துப் பழக அனுப்பி வைக்கலாம். இரு அணியும் சிரிப்பதைப் பார்த்து இன்னும் சில பேரைக் கட்சியைவிட்டுத் தூக்கி கட்சிக்குள் கலவரத்தை வரவழைத்து தி.மு.க இன்னும் இன்னும் சம்மர் கூல் ஆகலாம்.

* எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா என்ன செய்வாரோ ஏது செய்வாரோ தெரியாது. ஆனால் அடுத்த தேர்தல் வருவதற்குள் அவரது கணவர் தனியாக வந்து கட்சி ஏதும் ஆரம்பித்து விடாமல் அணை போட்டு பார்த்துக்கொண்டாலே போதும். பாதி பிரச்னைகள் அவருக்குத் தீர்ந்துவிடும்.

* பாட்டுப்பாடிக் கொண்டிருந்த கங்கை அமரன் படாதபாடுபட்டு ஓட்டு கேட்டதெல்லாம் பாழப்போச்சே ஃபீலிங்கில் இருப்பார். நாங்களும் எங்க கட்சித்தொண்டர்களும் வாக்கு கேட்கப்போன காலத்துல பார்த்தீங்கனா... எனக் கதைகதையாகப் பேசிக்கொண்டிருக்காமல் அதை எல்லாம் கொஞ்சம் ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டு கிடைத்திருக்கிற இந்த கேப்பில் ஏதாவது மினி சிங்கர் போட்டிகளை நடத்தி விட்டுப்போன ஃபார்மை மீட்கலாம்.

* கம்யூனிஸ்டு கட்சிகள் இதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்கனு தெரியலை. ஆனா இனிமே என்ன பண்ணலாம்னு சில ஐடியா இருக்கு. கடைசி நேரத்துல ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவுன்னு ஜி.கேவாசனும் தினகரனுக்கு ஆதரவுன்னு சரத்குமாரும் கிளம்பின மாதிரி மக்கள் நலக் கூட்டணியிலேயும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்க யாராவது காத்துக்கிட்டு இருக்கலாம். அதனால தேர்தல் வர்றதுக்குள்ள அவங்களையும் உள்ளே இழுத்து பெரும்பான்மையைக் கூட்டலாம்.

* இந்தத் தேர்தலில் தே.மு.தி.க நிற்குதா இல்லையான்னே தெரியாத அளவிற்கு அந்தக் கட்சியின் பெர்ஃபார்மன்ஸ் இருப்பதால் என்ன செய்யச் சொல்லுவதென்றே தெரியவில்லை ஆனால் ஏதாவது செய்யலாம்.

- ஜெ.வி.பிரவீன்குமார்