Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

மகாத்மா காந்தியில் தொடங்கி, சோனியா காந்தி வரையில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு மாற்றங்களையும் வரலாறு பத்திரமாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. அந்தக் கட்சியின் 125-வது வயதைக் கொண்டாடும் இந்த நேரத்தில், டெல்லியில் இரண்டு நாள் மாநாடு நடத்தி, எளிமையின் சிறப்பு பற்றிப் பேசியிருக்கிறார் சோனியா காந்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொது வாழ்க்கையில் நேர்மை, நாணயம், எளிமை ஆகியவை மிக முக்கியம் என்று தன் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். 'படாடோபமான வாழ்க்கையைப் பட்டவர்த்தனமாகப் பந்திவைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தக் கூடாது' என்று காலத்துக்கு ஏற்ற ஒரு கட்டளையைப் போட்டிருக்கிறார்!

தனக்கு வந்த தபால் உறைகளின் பின் பக்கத்திலேயே பதில் கடிதங்களை எழுதி அனுப்பிய தேசத் தந்தையையோ, சொந்த ரத்த பந்தத்துக்கே ஒரு புதிய மின் விசிறியை வாங்கித் தர மறுத்துவிட்ட மக்கள் தலைவரையோ இனிமேல் அரசியலில் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்பது மக்களுக்கும் புரிந்தே இருக்கிறது! அதனால்தான், 'மண்ணைத் தின்றாலும் மறைவாகத் தின்னு' எனும் சொலவடையை மாற்றி, 'பொன்னைத் தின்றாலும் பதுக்கித் தின்னு' என்று பொருத்தமாகச் சொன்னாரோ 'அன்னை'?

அதே சமயம், 'இனிமேல், ஒரு நாளும் ஊழலைப் பொறுக்க மாட்டோம்'என்று காலம் கடந்தாவது சோனியாவும், அவரை வழிமொழிந்து மன்மோகன் சிங்கும் சீறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த சீற்றம் செயலாக்கம் பெற்றால்தான், இந்த 'திடீர் வீரத்தை’ மக்கள் மதிப்பார்கள்!

காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் அப்பாவி ஜனங்கள் இப்போது வைக்கும் பரிதாப வேண்டுகோள் இதுதான் -

'எங்களின் அரை வயிற்றுக் கஞ்சியில் கை வைத்துக் கிடைத்த காசில், ஆடம்பரக் காரில் நீங்கள் போவதை நிறுத்திக்கொள்வீர்களோ, மாட்டீர்களோ... எங்களிடம் மிச்சம் இருக்கிற அலுமினியத் தட்டையும் பிடுங்காமல் இருந்தால் சரி!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism