Published:Updated:

ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் கட்சி அபார வெற்றி!

ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் கட்சி அபார வெற்றி!
ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் கட்சி அபார வெற்றி!
ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் கட்சி அபார வெற்றி!

ஹைதராபாத்: ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்  15  தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்று உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளிக்கும் ஒரு மக்களவை தொகுதிக்கும்  இம்மாதம் 12-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 15 இடங்களில்  வெற்றி பெற்று உள்ளது.

அதே சமயம் காங்கிரஸ் 2 இடங்களை  மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது.

 டிஆர் எஸ். ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்ப்ற்றியுள்ள நிலையில்,  தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.