Published:Updated:

முலாயம், மாயாவதியை வளைத்தது காங்கிரஸ்!

விகடன் விமர்சனக்குழு
முலாயம், மாயாவதியை வளைத்தது காங்கிரஸ்!
முலாயம், மாயாவதியை வளைத்தது காங்கிரஸ்!
முலாயம், மாயாவதியை வளைத்தது காங்கிரஸ்!

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்க சமாஜ்வாதி  கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஒப்புக்கொண்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சி  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டதாகவும்,விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக பிரணாப்  முகர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் இன்னமும் முலாயமும், தாமும் ஒரே கருத்துடனே இருப்பதாகவும்,ஜனாதிபதி  தேர்தலில் அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் எனபதே தம்முடைய விருப்பம் என்றும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள்ளார். 

மாயாவதியும் ஆதரவு

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் தங்களது  வேட்பாளரை ஆதரிக்க  மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் சம்மதம் தெரிவித்துல்லதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.