Published:Updated:

ஜூன் 24 ல் பிரணாப் ராஜினாமா?

விகடன் விமர்சனக்குழு
ஜூன் 24 ல் பிரணாப் ராஜினாமா?
ஜூன் 24 ல் பிரணாப் ராஜினாமா?
ஜூன் 24 ல் பிரணாப் ராஜினாமா?

புதுடெல்லி: ஜ னாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி  ஆகிவிட்டதால்,அத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக அவர் ஜூன் 24 ம் தேதியன்று தமது  மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று டெல்லி காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் மக்களவை அவைத் தலைவர் பதவியையும் பிரணாப் முகர்ஜி வகித்து  வருவதால்,அப்பதவிக்கும் மாற்று தலைவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு  வருவதாகவும்,அநேகமாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அல்லது சுஷில்குமார்  ஷிண்டே ஆகிய இருவரில் ஒருவர் அப்பதவியை வகிக்கக்கூடும் என்றும் காங்கிரஸ்  வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அதே சமயம் பிரணாப் வசம் இருந்த நிதியமைச்சர் இலாகாவை பிரதமர் மன்மோகன்  சிங்கே வைத்துக்கொள்வார் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.