Published:Updated:

’கலாம்’ என்றாலே கலகம்தான்: கருணாநிதி கடுப்பு!

விகடன் விமர்சனக்குழு
’கலாம்’ என்றாலே கலகம்தான்:  கருணாநிதி கடுப்பு!
’கலாம்’ என்றாலே கலகம்தான்: கருணாநிதி கடுப்பு!
’கலாம்’ என்றாலே கலகம்தான்:  கருணாநிதி கடுப்பு!

சென்னை:  கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்று ஒரு பொருள் உண்டு என்றும்,அதேப்போன்று ஜனாதிபதி தேர்தலிலும் கலகம் உருவாகியுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”
”புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருப்பதைப்பற்றி  கவலைப்படவில்லை.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  15 இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான்”என்றார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெறுவதற்கும், மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி தோற்பதற்கும்  என்ன காரணம்? எனக் கேட்கடபோது, வெற்றி தோல்விதான் காரணம் என்று பதிலளித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களிலும், தற்போது  ஆந்திர இடைத் தேர்தலிலும்  காங்கிரஸ்  தோல்வி அடைந்துள்ளது. அடுத்து வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தோல்வி எதிரொலிக்குமா? என்ற கேள்விக்கு 
வெற்றி, தோல்வியை எதிரொலிக்க முடியாது என்று கூறினார்.

தேமுதிக, புதுக்கோட்டையில்  திமுக-வின் ஆதரவுடன் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்று கேட்டபோது, அது பற்றிப் பேச நான் தயாராக இல்லை என்று பதிலளித்தார் கருணாநிதி.

ஜனாதிபதி தேர்தல்  முடிவு  நாடாளுமன்றத் தேர்தலைப் பாதிக்குமா? என்ற கேள்விக்கு யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார்.

அதிமுக முன்பு தனது வேட்பாளராக சங்மா பெயரைக் கூறியது.ஆனால் நேற்று அத்வானியைச் சந்தித்திருக்கிறது.சங்மாவை தற்போது அதிமுக கை விட்டதாக தகவல் சொல்லப்படுகிறதே?என்ற கேள்விக்கு தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார் கருணாநிதி.

மம்தா பானர்ஜி சொல்லும்போது  அப்துல் கலாம் தான் வேட்பாளர் என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு,கலாம்  என்பதற்கு  தமிழில்  கலகம் என்றும் ஒரு பொருள் உண்டு.எப்படியோ ஜனாதிபதி தேர்தலிலும் கலகம்  உருவாகியிருக்கிறது என்று பதிலளித்தார் கருணாநிதி.

அந்தக் கலகம் காரணமாக,  திமுகவின் நிலைப்பாடு என்ன ஆகும்? எனறு கேட்டபோது,”நாங்கள் ஏற்கனவே சொன்னதில்  உறுதியாக இருக்கிறோம்.காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேர்மையான  மனிதர் என்று சொல்லப்படும் அந்தோணி சென்னைக்கு வந்து என்னிடம்  பேசியிருக்கிறார்.சோனியா அனுப்பி அவர் என்னிடம்  சொல்லிய தகவலுக்கு நான் அப்போதே ஆதரவு அளித்திருக்கிறேன்.அந்த ஆதரவிலிருந்து  திமுக பின் வாங்காது. முதலில் ஒருவரைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாற மாட்டோம்”என்று பதிலளித்தார்.