Published:Updated:

ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி:அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி:அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி:அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி:அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

பிரதமரின் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலை அரசு இல்லத்தில்,பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே இன்று மாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி,ஏற்கனவே எதிர்பார்த்தபடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். 

இந்நிலையில், இக்கூட்டத்தில் பிரணாப்பை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப்  முகர்ஜி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சித் தலைவர்  சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலை அரசு இல்லத்தில்,பரபரப்பான சூழ்நிலைகளுக்கு  இடையே இன்று மாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம்  நடைபெற்றது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி,ஏற்கனவே  எதிர்பார்த்தபடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். 

இந்நிலையில், இக்கூட்டத்தில் பிரணாப்பை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கூட்டணி  கட்சித் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு  கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிரணாப் முகர்ஜி பொது வாழ்வில், 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அனுபவம்  கொண்ட புகழ் பெற்ற நபர் என்றும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவருக்கு  அனைத்து அரசியல் கட்சிகளும்,நாடாளுமன்ற மற்றும் இதர அவைகளின்  உறுப்பினர்களும் ஆதரவளிக்குமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தாம் கேட்டுக்கொள்வதாகவும் சோனியா காந்தி மேலும் தெரிவித்தார்.

சோனியா காந்தி இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் வெளியிடும்போது ஐக்கிய  முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள் பலரும்  உடன் இருந்தனர்.

பலத்த கரகோஷங்களுக்கு இடையே சோனியா அறிவிப்பை வெளியிட்டதும்,திமுக  மூத்த தலைவரான டி.ஆர். பாலு, சோனியா காந்திக்கு சால்வை அணிவித்து பாராட்டு  தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் அவர்  சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆதரவு இல்லை: மம்தா

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக  போட்டியிடும் பிரணாப் முகர்ஜியை தமது கட்சி ஆதரிக்காது என்று திரிணாமுல்  காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக ஆதரித்துவிட்டார்.

இடதுசாரிகள் ஆதரவு

ஆனால் சோனியா காந்தியின் அறிவிப்பை தொடர்ந்து பிரணாப்பை தாங்கள்  ஆதரிக்கப்போவதாக இடதுசாரி கட்சிகளும் சூசகமாக தெரிவித்துவிட்டன.

பா.ஜ.விடம் ஆதரவு கோரிய பிரதமர்

இதனிடையே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் இன்று மாலை அறிவிக்கப்பட்டவுடன், பிரதமர் மன்மோகன் சிங் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு பிரணாப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு பிரதமரின் கோரிக்கை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரணாப்பை ஆதரிக்க பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன,.

பிரணாப் வெற்றி உறுதி

திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளை தவிர்த்து பெரும்பாலான கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுவிட்டதால், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.