Published:Updated:

டெபாசிட்டை இழக்காத தேமுதிக!

டெபாசிட்டை இழக்காத தேமுதிக!
டெபாசிட்டை இழக்காத தேமுதிக!

புதுக்கோட்டை:

டெபாசிட்டை இழக்காத தேமுதிக!

துக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஜாஹீர் உசேன் 30,500 வாக்குகளை பெற்று தமது டெபாசிட்டை பறிகொடுக்காமல் தப்பித்துக்கொண்டார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளான திமுக,மதிமுக,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில்,தேமுதிக மட்டுமே தைரியமாக களம் இறங்கியது.

வெற்றி கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்தாலும்,கவுரவமான வாக்குகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று கங்ங்கணம் கட்டிக்கொண்டு தொகுதியை வலம் வந்தார் தேமுதிக வேட்பாளரான ஜாஹீர் உசேனும்,அக்கட்சித் தலைவரான விஜயகாந்தும்.

அதற்கு பலனாக தேமுதிக மொத்தம் பதிவான 1,43,227 வாக்குகளில் 30,500 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழக்காமல் தப்பித்தது.

தேமுதிகவை சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழக்கச்செய்தது போன்று இத்தேர்தலிலும் டெபாசிட்டை இழக்கச்செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பணிக்காக களமிறக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாளத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தபோதிலும்,அது நடக்காமல்போனது தேர்தல் பணியாற்றிய அதிமுக புள்ளிகளுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் புதுக்கோட்டை தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு வாங்கியதை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது தேமுதிக.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவும்,தேமுதிகவும் போட்டியிடவில்லை.இரண்டுமே அப்போது கூட்டணிக் கட்சிகள்.இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.

இதற்கு முன்பு அதிமுகவும், தேமுதிகவும் இந்தத் தொகுதியில் 2006ல் நடந்த பொதுத் தேர்தலில்தான் நேருக்கு நேர் மோதியுள்ளன.அந்தத் தேர்தல்தான் தேமுதிகவுக்கு முதல் சட்டசபைத் தேர்தலாகும்.

2006ல் நடந்த தேர்தலில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது.அக்கட்சி சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் 64,319 வாக்குகளைப் பெற்றார். 2வது இடத்தைப் திமுகவின் ஜாபர் அலி பெற்றார்.வெற்றி வித்தியாசம் வெறும் 1950 மட்டுமே. தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஜவஹர் டெபாசிட் இழந்தார். அவருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 6880. அக்கட்சிக்கு 4வது இடம் கிடைத்தது.

இப்போது நடந்துள்ள இடைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட சில கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு புண்ணியத்தால்,அக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவுக்கு வாக்களித்து இருக்கலாம் என்று தெரிகிறது.