Published:Updated:

'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட்

தார்மிக் லீ
'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட்
'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட்

ரசியல்ல நடக்கிற கொடுமைகளையெல்லாம் பார்க்கிறப்போ பேசாம ஊரை விட்டுப் போயிடலாம்னு ஓர் எண்ணம் வந்துச்சு... அப்போதான் சின்னதா ஒரு யோசனை. நாம ஏன் இந்த மனுஷன்கிட்ட பேசக் கூடாது? 'ரமணி ஆவியுலக ஆராய்ச்சியாளர்'. இப்படி முழுசா சொன்னாதான் அவருக்குப் பிடிக்கும் இல்லைன்னா என் மேல பேயை ஏவி விட்டுடுவார். போறதுதான் போறோம் இப்போ இருக்கிற நிலைமையில் அம்மா ஆன்மா என்ன சொல்லுதுனு ஒரே ஒரு கேள்வியை கேட்டுட்டுப் போகலாம்னு முடிவு பண்ணி இவருக்கு ஒரு போன் போட்டேன். 

'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட்

மொதல்ல இவரைப் பற்றி ஒரு அறிமுகம். சென்ற வருடம் தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்று 'எம்.ஜி.ஆர்', 'அண்ணா' போன்ற ஆன்மாவுடன் பேசிய மகா சக்தி வாய்ந்த மனிதன்தான் இந்த ரமணி. அந்தக் கண்கொள்ளாக் காட்சியை மிஸ் பண்ணவங்க பாவம் பண்ணவங்க... சரி இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. லிங்க் பார்த்து கன்னத்துல போட்டுக்கங்க.

சரி இப்போ நம்ம கேள்விக்கு வருவோம்...

''புரட்சி தலைவி அம்மாவோட ஆன்மா என்ன சொல்லுது?''

''போன வீடியோவுக்கே நிறையப் பிரச்னை வந்துச்சு. உண்மையைச் சொல்லணும்னா நானும் அ.தி.மு.க-தான். ஆனா என்னையே அ.தி.மு.க-வுக்கு எதிரா பேசுறேன்னு சொல்லிட்டாங்க. நீங்க இவ்வளவு அழுத்திக் கேட்கிறனால எனக்கு ரெண்டுமணி நேரம் டைம் கொடுங்க.'' என்றார்.  

2 மணி நேரம் கழித்து...  

''பூஜை நல்லபடியாக முடிந்துவிட்டது.. இதுதான் எனக்கு வந்தத் தகவல்'' என்று ஆரம்பித்தார்.

'''இந்த முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்குமே இருக்காது. ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டேதான் இருப்பார்கள். தேர்தலும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். ஆர்.கே.நகர் வேட்பாளர்களாக இருக்கட்டும், பிரசாரம் செய்பவர்களாக இருக்கட்டும் இவர்களில் யாருமே ஆட்சியைப் பிடிக்க மாட்டார்கள். இவர்கள் இல்லாமல் ஓர் ஆள் புதுசா வருவார். முக்கியமான விஷயம் அவர் ஆன்மிகத் துறையைச் சார்ந்தவர். அவர் யார்? என்று சொல்ல எனக்கு அனுமதியில்லை. எப்படி உ.பி-யில் ஒரு முதலமைச்சர் வந்தாரோ... அதே நிலைமைதான் தமிழகத்திற்கும் வரப் போகிறது. அது நடக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆகும். இன்னும் காலம் இருக்கிறது. ஒன்றை மட்டும் அடித்துக் கூறுவேன். அ.தி.மு.க-வாக இருக்கட்டும், தி.மு.க-வாக இருக்கட்டும்; இவர்களில் யாரும் ஆட்சியைப் பிடிக்கப்போவதில்லை. இது சத்தியம். வரப்போறது புதுசா ஓர் ஆள். ''நான் நிறுத்தி யாருய்யா அந்த நியூவா ஒரு ஆள்?னு கேட்டேன். அதற்கு அவர் ''அதான் தம்பி புதுசா ஓர் ஆள் வரவிருக்கிறார். அது மட்டுமில்லாமல் வரும் மே 1-ம் தேதி வானத்தில் அதிசயம் ஒன்று நடக்கப் போகிறது. அந்த நேரத்தில் சூரியன் மாதிரி ஒரு நட்சத்திரம் தோன்றும். எல்லா மனிதர்களும் அதைப் பார்க்க முடியும். அந்த விஷயம் நடந்தால் நான் சொன்ன விஷயமெல்லாம் கண்டிப்பாக நடக்கும். இதையெல்லாம் நான் சொல்லவில்லை எல்லாம் மேல இருக்கிறவர்தான் சொல்கிறார். இதோடு சேர்த்து எனக்கு வழிகாட்டும் ஆன்மாக்கள் எல்லாமே இதே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அதில் போகர் அய்யாவும் ஒருவர். என்னை மாதிரி நிறைய ஆன்மிகப் பிரியர்களுக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கிறது. அதனால் தமிழகத்தில் இப்போது இருக்கும் எந்த அரசியல்வாதிகளும் நிற்க மாட்டார்கள். ஒருத்தர் உள்ளே வருவார். அவர் ஆன்மிகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தை ஆளப்போகிறவர் அவர்தான். ( 'ஒருவேளை இவரைத்தான் சொல்றாரோ?'). வரும் காலங்களில் இந்தியாவை ஆன்மிகத்தைச் சார்ந்தவர்கள்தான் ஆளப் போகிறார்கள். இதுதான் எனக்கு வந்த தகவல்கள். அரசியல் மாற்றங்கள் நடக்கும். இருக்கும் அரசியல்வாதிகள் காலியாகப் போகிறார்கள். நம் நாட்டிற்கு எப்போது மோடி என்று முடிவானதோ... அப்போதே இந்த விளையாட்டுகள் ஆரம்பித்துவிட்டன. சுருக்கமாகச் சொன்னால் அரசியல்வாதிகளுக்கு நேரம் சரியில்லை.'' 

''ஒன்பது கிரகத்தில் உச்சம் பெற்ற ஒருவன்... எம்.ஜி.ஆர் உடனும் பேசுவான்... புரட்சி தலைவி அம்மாவோடும் பேசுவான்'' என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டார். கடைசி வரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. வாழ்க ஜனநாயகம்!

- தார்மிக் லீ