Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

த்தரப்பிரதேச மாநில சாமியார் ஷோபன் சர்க்காரின் கனவில், 19-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த ஒரு மன்னர் வந்து, 'தாண்டியா கெரா பகுதியில் எங்கெல்லாம் டன் கணக்கில் தங்கப் புதையலைப் புதைத்திருக்கிறேன்’ என்ற ரகசியம் சொன்னாராம். இந்த ரகசியத்தை மத்திய துணை அமைச்சர் சரண்தாஸிடம் சாமியார் சொல்ல, அவர் அகழ்வாராய்ச்சித் துறைக்கும், மத்திய புவியியல் துறைக்கும் புதையல் தேடும் 'அசைன்மென்ட்’ கொடுத்திருக்கிறார். மாவட்ட நீதிபதியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இப்போது தாண்டியா கெராவில் நடக்கும் புதையல் வேட்டை, புயலைக் கிளப்பி இருக்கிறது!

இதற்கிடையில் சிலர் அந்த ராஜாவுக்கு, 'நாங்கள்தான் வாரிசு’ என்று கிடைக்காத புதையலுக்குச் சொந்தம் கொண்டாடும் கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது. இவற்றையெல்லாம்விட உச்சகட்ட வேடிக்கையாக, மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், 'புதையல் கண்டுபிடிக்கப்பட்டால், அதில் கணிசமான பங்கு மாநில அரசுக்கு வேண்டும்’ என்று உரிமை கோருவதாகவும் செய்திகள்!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

இந்த வேடிக்கை விநோதம், நான்கு சோம்பேறிப் பிள்ளைகளைக்கொண்ட விவசாயி தன் மரணப்படுக்கையில், 'விவசாய நிலத்தில் புதைத்த தங்கப் புதையல் பானை...’ என்று வாக்கியத்தை முடிக்காமல் இறந்துபோன, பழங்காலத்துக் கதையை நினைவூட்டுகிறது. அந்த நான்கு மகன்களும் ஆளாளுக்கு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கழனியைக் கொத்திக் கிளறியிருக்கிறார்கள். ஆனால், துளி தங்கம்கூட தட்டுப்படவில்லை. 'சரி, இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம்’ என்று கொத்திப்போட்ட வயலில் நெல்லை விதைத்திருக்கிறார்கள். அடிமண் நன்கு கிளறப்பட்ட அந்தக் கழனி, வழக்கத்தைவிட அமோக மகசூல் அளித்திருக்கிறது. அப்பா சொன்ன தங்கப் புதையல் இதுதான் என்று அந்த சோம்பேறி மகன்களுக்கு மிகத் தாமதமாகப் புரிந்திருக்கிறது.

'உழைக்காது கிடைக்கும் எந்தச் செல்வமும் ஒட்டாது’ என்ற அறிவுரைதான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப்போன தங்கப் புதையல். இந்த நிலையில் உழைப்பின் மேன்மையைச் சொல்ல வேண்டிய அரசாங்கமே, புதையல் வேட்டையில் ஈடுபட்டு கோமாளித்தனம் செய்வதை நினைத்து, சிரிப்பதா... அழுவதா..?