Published:Updated:

'தமிழ் பற்று மேலோட்டமானது'- கமல், சத்யராஜை விமர்சிக்கும் ஹெச்.ராஜா

சண்முகபாண்டியன்.தே
'தமிழ் பற்று மேலோட்டமானது'-  கமல், சத்யராஜை விமர்சிக்கும் ஹெச்.ராஜா
'தமிழ் பற்று மேலோட்டமானது'- கமல், சத்யராஜை விமர்சிக்கும் ஹெச்.ராஜா

கமலஹாசன், சத்யராஜ் உள்ளிடோர் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பும் பற்றும் மேலோட்டமானதுதான் என விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

'தமிழ் பற்று மேலோட்டமானது'-  கமல், சத்யராஜை விமர்சிக்கும் ஹெச்.ராஜா

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பாகுபலி 2-ஆம் பாகத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒன்பது வருடங்களுக்கு முன்னர் காவிரி விவகாரத்தில் கன்னடர்களை சத்யராஜ் இழிவாக பேசியதாகக் கூறி, அவர் நடித்துள்ள பாகுபலி-2 படத்தை திரையிட மறுத்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.  இதையடுத்து சத்யராஜ் நேற்று தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். கன்னட அமைப்புகளின் சார்பிலும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. இது குறித்த தனது ட்விட்டர் பதிவில்,' சத்யராஜ், கமல் போன்றவர்களுக்கு பணம் மட்டுமே முதன்மையானது. தமிழ் பற்றும், தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பும் மேலோட்டமானது என விமர்சித்துள்ளார். தன்மானத்தை குறைத்துக் கொண்டு வாட்டாள் நாகராஜிடம் பணத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.