Published:Updated:

சங்மாவை ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை: ஜெயலலிதா

சங்மாவை  ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை: ஜெயலலிதா
சங்மாவை ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை: ஜெயலலிதா
சங்மாவை  ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை: ஜெயலலிதா

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ. சங்மாவை தமது கட்சி ஆதரிக்கும் முடிவில் மாற்றம் ஏதுமில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்கலாம் என்றும்,இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிற நிலையில்,ஜெயலலிதா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


கொடநாடு செல்லும் வழியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, “ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்தேன்.

அதன்பின்னர் பல்வேறு கட்சித்தலைவர்களும் என்னை தொடர்புகொண்டு பேசினர்.அப்போது ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிக்க வேண்டும் எனக்கோரினர்.

ஆனால் தற்போது கலாம் போட்டியிடவில்லை.இந்நிலையில் அதுபற்றி தற்போது பேசவேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ. சங்மாவை அதிமுக ஆதரிக்கும் முடிவில் மாற்றம் ஏதுமில்லை.அவரை மற்ற கட்சிகள் ஆதரிப்பது தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள். மம்தா பானர்ஜியும்  .சங்மாவை ஆதரிப்பார் என நம்புகிறேன்.”எனக் கூறினார்.