Published:Updated:

செல்லூர் ராஜுவுக்கே சவால்விடும் ஜெயக்குமாரின் காமெடிகள்!

செல்லூர் ராஜுவுக்கே சவால்விடும் ஜெயக்குமாரின் காமெடிகள்!
செல்லூர் ராஜுவுக்கே சவால்விடும் ஜெயக்குமாரின் காமெடிகள்!

'13ம் ஜோக்கராக இருந்தா எப்படி அடிக்கிறது'ங்கிற  சினிமா டயலாக் மாதிரியே, இருக்குற அம்புட்டுப்பேரும் ஒவ்வொரு டிசைன்ல இருந்து சிரிப்பா சிரிக்க வைக்கிறதுன்னா தற்பொழுது அது சாட்சாத் அ.தி.மு.க தான். தெர்மாகோல் போட்டு வைகை அணையை மூடின செல்லூர் ராஜூவை விடுங்க, அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் கொஞ்ச நஞ்சமாகவா காமெடி பண்ணியிருக்காரு? 

* முதல்ல 'கழகமே கோவில் அம்மாவே தெய்வம்' னு இருந்த ஜெயக்குமார், சசிகலா அடுத்து என்ட்ரி ஆனதும் யூ டர்ன் போட்டு டேபிள் சேரை எல்லாம் உடைச்சு பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிப்பாருன்னு பார்த்தா ட்விஸ்ட்டே வேறமாதிரியாக இருந்தது. பத்தோட பதினொண்ணாக இவரும் பெட்டிக்குள்ளே முடங்கி பெப்பே காட்டிட்டார்.

* பெட்டின்னு சொன்னதும்தான் இன்னொரு ஞாபகம் வருது. தெரிஞ்சு பண்ணுனாரா இல்ல தெரிஞ்சுக்கிட்டேதான் பண்ணுனாரான்னு தெரியலை (ரெண்டுமே ஒண்ணுதானோ.) சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பட்ஜெட் உரையை வெளியே கொண்டுபோறதுங்கிறதே தப்பு, அதை எடுத்துக்கிட்டு பப்ளிக்காக மெரினா சமாதி வரைக்கும் கொண்டுபோய் அரசு மாண்பையே (இன்னுமா அதெல்லாம் இருக்கு ) வீதிக்குக் கொண்டுவந்து சந்தி சிரிக்க வெச்ச பெருமையும் இந்த அமைச்சர் ஜெயக்குமாருக்குத்தான் இருக்கு மக்களே..

*தெர்மாகோல் காமெடிக்கெலாம் முன்னோடியே, இவர் செய்த காமெடியையெலாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துட முடியுமா என்ன? சரக்குக்கப்பல்கள் மோதி எண்ணூர்ல கசிஞ்ச எண்ணெய்க்கசிவையெல்லாம் ஊழியர்கள் வாட்டமா உட்கார்ந்து வாளியில அள்ளி ஊத்திக்கிட்டு இருக்குறப்போ, மீன்வளத்துறை அமைச்சரா அதைச் சீரும் சிறப்புமா கண்டினியூ பண்ணுனவர் யாருன்னு நினைச்சீங்க?! எல்லாமே இவருதான், இவரேதான் மக்களே..!

*ஒருவாரத்துக்கு முன்னாடி தம்பிதுரையும் இவரும் தனித்தனியாக ஆளுநரை சந்திக்கப்போயி, பத்திரிகையாளர்கள் ஏன் எதுக்குன்னு கேட்டதுக்கு, 'ஆளுநர் என்னோட ஃபிரண்ட் அதனால சும்மா பாக்க வந்தேன் ஃபிரண்ட்' எனச் சொல்லி தம்பிதுரை எஸ்கேப் ஆகிட்டார்.  அவர் வயசுக்கு அவர் ஃபிரண்ட் னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டார். நாம எப்படி சொல்றதுங்கிறதாலேயோ என்னவோ பல்கலைக்கழகத் தேர்வு விஷயமா வந்தேன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டார் ஜெயக்குமார். எதுவோ உண்மையா இருந்துட்டுப் போகட்டும், அது முக்கியமில்லை. ஆனா, 'தன்னால்தான் ட்ரம்பே ஜெயிச்சார்'னு கூட ஓ.பி.எஸ் சொல்லுவாருன்னு சொன்னவர், இப்போ அடுத்த சில நாள்களிலேயே அப்படியே ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகி அவர்கூடவே சேர ட்ரை பண்ணுறார் பாருங்க, அதுதான் பாயின்ட்!

* அதையெலாம் விடுங்க, இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு அறிக்கை விட்டார் பாருங்க, அது அதைவிட அல்டிமேட் பாஸு. ஆமா,  'ஓ.பி.எஸ் எங்கள் அணியோடு சேருவதாக இருந்தால் எனது நிதி அமைச்சர் பதவியையே விட்டுத்தருகிறேன்'னு சொல்லியிருக்கார் ஜெயக்குமார். உண்மையிலேயே தெரியாமதான் கேக்குறேன், பொதுவெளியில இப்படியெல்லாம் சொல்றதுக்கு அது என்ன கட்சிப்பதவியா? அப்படின்னா நிதி அமைச்சராக இருக்குறது உங்களுக்குத் தொந்தரவாக இருக்குதா? பத்து எம்.எல்.ஏக்களைக் கையில வச்சிருக்கிறதுதான் ஒரு நிதி அமைச்சருக்கான தகுதியா? இல்லை, நிதி அமைச்சர் ஆகுறதுக்கெலாம் தகுதிகள் தேவையில்லைங்கிறீங்களா? ( ஆனா ஒண்ணு. நீங்க பண்றதையெலாம் பார்த்தா பெருசா அப்படி ஒண்ணும் தகுதிகள் தேவையில்லைங்கிறமாதிரிதான் தெரியுது)

* அதிலேயும்  அமைச்சர் ஜெயக்குமார் இருக்குற  டீம்ல ஒரு அறிக்கைவிட்டாங்க பாருங்க, ‘ப்ராவோ... ப்ராவோ...’ லெவல் மக்களே. அதாவது 'ஆட்சியில இருக்குற நீங்க இப்படி தனித்தனியா பிரிஞ்சு கிடக்குறீங்களே எப்பதான்  ஒண்ணு சேரப்போறீங்க'ங்கிற கேள்விக்கு 'அமாவாசை வரட்டும்னு காத்திருக்கோம், அன்னைக்குத்தான் நல்ல நாள். பேசி ஒரு முடிவுக்கு வருவோம்'னு சொல்லிருக்காங்க. கட்சியில் இருக்கும் பதவிகளைத் தக்கவச்சிக்கிறதுக்காக அவங்க வேணா அடுத்த அமாவாசை வரைக்கும்கூட காத்துக்கிட்டு இருக்கட்டும். ஆனா, மக்கள் ஏன் காத்துக்கிட்டு இருக்கணும்னுதான் தெரியலை. ஹ்ம்ம்ம்... ஆனா ஒண்ணுங்க. ஏன், எதுக்குன்னு தெரியலை, இதைக்கேட்கும்போதெல்லாம் சத்யராஜ் நடிச்ச 'அமைதிப்படை அமாவாசை' கேரக்டர் ஆட்டோமேட்டிக்கா மைண்ட்ல வருது மக்களே...

- ஜெ.வி.பிரவீன்குமார்