Published:Updated:

தமிழிசை வாக்கு தப்பாமல் பலிக்கும்! - ஆட்சிக் குழப்பம் முதல் தினகரன் கைது வரை!

தமிழிசை வாக்கு தப்பாமல் பலிக்கும்! - ஆட்சிக் குழப்பம் முதல் தினகரன் கைது வரை!
தமிழிசை வாக்கு தப்பாமல் பலிக்கும்! - ஆட்சிக் குழப்பம் முதல் தினகரன் கைது வரை!

.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன், கட்சி நலனுக்காகவும், எதிர்கால நன்மைகளையும் கருத்தில் கொண்டு இரட்டை இலைச் சின்னத்தை மீட்க 'அற வழியில்' போராடிய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். என்ன பஞ்சாயத்துனா.. இரட்டை இலையை வாங்கும் ஆர்வத்தில் குறுக்கே இருந்த கம்பியைக் கவனிக்காமல் 'மடார் மடார்' எனத் தன் தலையையே முட்டி இருக்கிறார். அப்படித்தான் குறுக்குவழியில் இலையை மீட்க முயற்சித்த தினகரனை லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கட்டம் கட்டிக் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ. (இது நடக்கலாம்னு சொன்னதும் தமிழிசை தான்.)

தினகரனின் இந்தக் கைது சம்பவத்துக்கு,  பா.ஜ.க வுக்கும் தொடர்பு இருக்குனு எதிர்க்கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க-வின் சிலபல அணித் தலைவர்கள் முதல் முந்தாநேத்து கட்சி ஆரம்பிச்ச மாதவன் வரைக்கும் சொல்லிட்டாங்க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த பொன்னையன் மட்டும், 'இதுக்கும் பா.ஜ.க அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'னு வாயைக் கொடுத்து வான்டடா வண்டியில் ஏறி இருக்கார். அந்த பேஷன்டை வேற கேஸ்ல அட்மிட் பண்ணுவோம். இப்போ தமிழிசை விவகாரத்துக்கு வருவோம். 

தினகரன் கைதுக்கும், ஆளும் பா.ஜ.க-வுக்கும் இருக்கும் தொடர்பு தொடர்பாக, தமிழிசையிடம் கேட்டதற்கு, பொட்டில் அடித்தாற்போல 'ஆமாங்க... தினகரன் கைதுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்பந்தம் இருக்கு. பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால்தான் இதுபோன்ற தவறுகள் வெளிக்கொணரப் படுகின்றன. குற்றங்களைத் தடுப்பதில் பா.ஜ.க எப்போதும் முன்னிலை வகிக்கும்'னு கிடைச்ச கேப்பில் பயங்கரமாக பிட்டைப் போட்டிருக்கிறார். எல்லோரும் ஒருபக்கம் உருட்டின சோழியையே அவருக்குச் சாதகமாக மறுபக்கம் வைத்து உருட்டுனதுலயே குற்றம் சாட்டினவங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்கும். அதெல்லாம் இருக்கட்டும்.

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவங்கள் எல்லாவற்றையும் தமிழிசை எபப்டி முன்பே சொல்கிறார்? பின்னால் நடப்பவற்றை முன்னாலேயே சொல்பவர்களை முன்னாடியெல்லாம் தீர்க்கதரிசினு சொல்லுவாங்க. இப்போ எல்லாம் அவங்களுக்குப் பொதுவான பெயர் இல்லுமினாட்டியாம். இப்போ நடக்குற சம்பவங்களையெல்லாம் பார்த்து நமக்குமே அந்த டவுட்டு வந்துடுச்சு. 

இந்தியா சுதந்திரம் அடைஞ்சதுலேர்ந்து இப்போ நடந்த தினகரன் கைது வரைக்கும் இதெல்லாம் நடக்கும்னு முன்கூட்டியே சொன்ன ஒரே ஆள் யாரு? நம்ம அக்காதான். அதையே அப்பப்போ கேட்ச் பிடிச்சு பொன். ராதாகிருஷ்ணனும், எச்.ராஜாவும் கடையை நடத்திக்கிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இருக்கும்போதே 'ஆட்சி மாற்றம் வரும்'னு தமிழக பா.ஜ.க காரர்கள் சொல்லும்போது 'என்னய்யா கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க'னு கடந்துபோன பலரும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைக் கணக்குப் போட்டுப்பார்த்து 'இவிங்களுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்..!' மோடுக்கு வந்துருப்பாங்க. 

ஏற்கெனவே, கட்சிக்குள் பல குழப்பங்கள், தமிழிசையின் பேச்சு போலவே எசகுபிசகாகி கட்சி துண்டாகும்னு முன்னாடியே கணிச்சது, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகும்னு சொன்னது, அ.தி.மு.க கோஷ்டிகளின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படலாம்னு சொன்னதுனு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். 'இரட்டை இலையை முடக்க முயலவில்லை'னு சொன்ன நேரமாகப் பார்த்து உண்மையிலேயே சின்னம் முடக்கப்பட்டதெல்லாம் இவற்றில் டாப் லெவல். அக்கா வாக்கு எல்லாமே தப்பாமல் பலிக்கும் தெய்வ வாக்கு. இது உண்மையானால் அடுத்த டார்கெட் தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு.

ஆட்சி கலைஞ்சு மறுதேர்தல் வரும்னு கொஞ்சகாலமாகவே மேலோட்டமா சொல்ற டயலாக் எப்போ உண்மையாகப் போகுதுனு தெரியலை. தமிழிசை அக்கா சொன்னதுலேயே இன்னும் நடக்காம இருக்குறது தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும்ங்கிறதும், தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்ங்கிறதும் மட்டும்தாம். இதுல ஏதாவது ஒண்ணு நடந்தாலும் மொத்தத் தமிழ்நாட்டுக்கும் கிலி பிடிச்சுக்கும்ங்கிறது மட்டும் நிதர்சனம்.