Published:Updated:

30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை! பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழக அரசு விருது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை! பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழக அரசு விருது!
30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை! பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழக அரசு விருது!

30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை! பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழக அரசு விருது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை! பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழக அரசு விருது!

மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குத் தொண்டாற்றிவரும் சென்னை, அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு, 2017-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து,  அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 'அவ்வையார் விருது' எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம்,  சான்றிதழ்  மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, 2012-ஆம் ஆண்டு முதல் 'அவ்வையார் விருது' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குத் தொண்டாற்றிவரும், சென்னை, அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டி, 2017-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்க தமிழ்நாடு அரசால் தேர்வுசெய்யப்பட்டார். பத்மா வெங்கட்ராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அவ்வையார் விருதைப் பெற்றுக்கொண்ட பத்மா வெங்கட்ராமன், தனது சமூக சேவையை அங்கீகரித்து விருதுவழங்கியமைக்காக, தனது நெஞ்சார்ந்த நன்றியை முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு