Published:Updated:

ராணுவ வீரர்களின் தலை துண்டிப்பு விவகாரம் - பா.ஜ.க-வைத் தாக்கும் சிவசேனா

கார்த்திக் துரைமகாராஜன்.சி
ராணுவ வீரர்களின் தலை துண்டிப்பு விவகாரம் - பா.ஜ.க-வைத் தாக்கும் சிவசேனா
ராணுவ வீரர்களின் தலை துண்டிப்பு விவகாரம் - பா.ஜ.க-வைத் தாக்கும் சிவசேனா

'பா.ஜ.க-வுக்கு வேண்டுமானால், உத்தரப்பிரதேச வெற்றி அவர்களது மிகப் பெரிய சாதனையாக இருக்கலாம். ஆனால், ராணுவ வீரர்களின் உயிரிழப்பு, இந்தியாவின் தோல்வி' என்று சிவசேனா விமர்சித்துள்ளது. 

ராணுவ வீரர்களின் தலை துண்டிப்பு விவகாரம் - பா.ஜ.க-வைத் தாக்கும் சிவசேனா


கடந்த இரு தினங்களுக்கு முன்னர், காஷ்மீர் எல்லைப்பகுதியில் இருந்த இந்திய ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பின்னர், இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து, இரு ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி எடுத்துச்சென்றனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் செயலைக் கண்டிக்காத மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்து, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ இதழான 'சாம்னா'வில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'இதேபோன்று நடந்த முந்தைய தாக்குதல்களில், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பதில்களும் அவருடைய பதவி விலகலும், இந்தப் பிரச்னையை மத்திய அரசு எப்படி அணுகுகிறது என்பதற்கு உதாரணம். பாகிஸ்தான் தாக்குதல் சம்பவ விவகாரத்தில், எத்தனை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன என்று பிரதமர் மோடி விளக்க வேண்டும். இந்தத் தாக்குதல் விவகாரத்தில், தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, பெயரளவுக்கான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, நீண்ட காலத்துக்குப் பயனளிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு, ஒரே ஒரு 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' போதாது. பா.ஜ.க வேண்டுமானால், உத்தரப்பிரதேசத்தின் வெற்றியைத் தங்களது வெற்றியாகக் கருதலாம். ஆனால், ராணுவ வீரர்களின் உயிரிழப்பை, இந்தியாவின் தோல்வியாகத்தான் பார்க்க முடியும்' என்று கூறியுள்ளது.