Published:Updated:

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூற காரணம் இதுதான்! மு.க.ஸ்டாலின்

கார்த்திக் துரைமகாராஜன்.சி
மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூற காரணம் இதுதான்! மு.க.ஸ்டாலின்
மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூற காரணம் இதுதான்! மு.க.ஸ்டாலின்

அமைச்சர் வீட்டில், ரெய்டின்போது பிடிபட்ட ஆவணங்கள் காரணமாகவே, மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூற காரணம் இதுதான்! மு.க.ஸ்டாலின்


தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் தனது தொகுதியை இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார். அப்போது,  தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். கொளத்தூர் தொகுதியில் அமைந்திருக்கும் யுனைடெட் காலனியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கலைச்செல்வியின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூற காரணம் இதுதான்! மு.க.ஸ்டாலின்

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது 89 கோடி ரூபாய் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ஆவணங்கள் பிடிபட்டன. அதன் எதிரொலியாகத்தான் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக நான் கருதுகிறேன்' என்றார்.