Published:Updated:

ஜெ. சிகிச்சைப்படத்தை வெளியிட்டு முகத்திரையை கிழிப்போம்! ஓ.பி.எஸ் அணியை அதிரவைக்கும் புகழேந்தி!

க.சதீஷ்குமார்
சகாயராஜ் மு

'மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும்' என்று கர்நாடக  மாநில அ.தி.மு.க அம்மா கட்சியின் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்  அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் அணியினர் கூறிவருகின்றனர். ஆனால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி அணியினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக  மாநில அ.தி.மு.க அம்மா கட்சியின் செயலாளர் புகழேந்தி, 'ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும். அவரது புகைப்படங்களை வெளியிட அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது உடனிருந்த பன்னீர்செல்வம்,  தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறார். ஜெயலலிதா புகைப்படங்கள் வெளியானால் பலரது முகத்திரை கிழிக்கப்படும். புகைப்படத்தை வெளியிட்டால் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும்' என்று கூறினார்.