Published:Updated:

மதுரையில் 'ஸ்ட்ரைக்' வீதி நாடகத்துக்கு அனுமதி மறுப்பு!

மதுரையில் 'ஸ்ட்ரைக்'  வீதி நாடகத்துக்கு அனுமதி மறுப்பு!
மதுரையில் 'ஸ்ட்ரைக்' வீதி நாடகத்துக்கு அனுமதி மறுப்பு!

மதுரையில் 'ஸ்ட்ரைக்' வீதி நாடகத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது காவல்துறை.

மதுரையில் 'ஸ்ட்ரைக்'  வீதி நாடகத்துக்கு அனுமதி மறுப்பு!

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க கலைக்குழு சார்பாக மே 1-ம் தேதி மதுரை-செல்லூர், மீனாட்சிபுரத்தில் சர்வதேச தொழிலாளர் தின தெருமுனைக் கூட்டத்தில் வீதிநாடகம், பறையாட்டம், பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மே தினத்தின் வரலாற்றையும், மகத்தான பாரீஸ் கம்யூனிச புரட்சியின் வரலாற்றையும், தமிழக அரசின் மாஞ்சோலை படுகொலை வரலாற்றையும் விளக்கி 'ஸ்ட்ரைக்' என்ற தலைப்பில் வீதி நாடகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து இன்று  மதுரை ஜெய்ஹிந்தபுரம், வாஞ்சிநாதன் படிப்பக வீதியில் நடைபெற இருந்த தெருமுனைக் கூட்டத்தில் நாடகம், பறையாட்டம் நடத்த அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடகம் நடத்த போதிய இடம் இல்லை என்று பொய்யான காரணத்தையும், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தையும் கூறியுள்ளது காவல்துறை.