Election bannerElection banner
Published:Updated:

அமுல் முதல் பதஞ்சலி வரை..! - மோடி மாடலாக வந்த விளம்பரங்கள் தெரியுமா?

அமுல் முதல் பதஞ்சலி வரை..! - மோடி மாடலாக வந்த விளம்பரங்கள் தெரியுமா?
அமுல் முதல் பதஞ்சலி வரை..! - மோடி மாடலாக வந்த விளம்பரங்கள் தெரியுமா?

அமுல் முதல் பதஞ்சலி வரை..! - மோடி மாடலாக வந்த விளம்பரங்கள் தெரியுமா?

ந்தியப் பெருமையை உலகெங்கிலும் பரவச் செய்வதற்காகவே வருடத்தில் பாதி நாள்கள் ட்ராவலிங் மோடிலேயே இருக்கும் மோடி, பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸிடரும் கூட. பி.ஜே.பி கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதற்கும் நரேந்திர மோடியின் முகத்தைப் பயன்படுத்தி அந்தக் கட்சி பிராண்டிங் செய்ததே காரணம். மக்களை எளிதில் கவரக்கூடிய முகம் என கார்ப்பரேட் நிறுவனங்களும் அவரது முகத்தைத் தங்கள் விற்பனைக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன. இன்றைய தேதியில் சல்மான், ஷாருக் போல பிரபலமான நிறுவனங்களின் மாடலாக இருந்தாலும் மார்க்கெட் மதிப்புக் குறைவான ஒரே மாடல் மோடிதான். அப்படி இதுவரை, மோடியைத் தங்களது விளம்பர மாடலாகப் பயன்படுத்திய நிறுவனங்களின் பட்டியலைப் பார்க்கலாம். 

பதஞ்சலி

நேற்றைய நாளிதழ்களின் முகப்புப் பக்க விளம்பரம் மோடி ரிப்பன் வெட்டக் காத்திருக்கும் பதஞ்சலி ஆய்வு நிறுவனத்தின் விளம்பரம்தான். இதன்மூலம் மோடி மாடலாக அறிமுகமாகும் நிறுவனங்களின் பட்டியலில் புதிதாகப் பதஞ்சலியும் இணைந்துள்ளது. பாபா ராம்தேவ்வின் நிறுவனமான பதஞ்சலி பி.ஜே.பி ஆதரவோடுதான் வியாபாரக் களத்திலேயே குதித்தது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பதஞ்சலி கம்பெனிக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. லேட்டஸ்டாக பதஞ்சலி நிறுவனத்துக்கும் மாடலாகி இருக்கிறார் நம் பெருமைக்குரிய பாரதப் பிரதமர்.

ஜியோ

அம்பானியின் கனவுத் திட்டமான 'ஜியோ' தொடங்கியபோதும் பிரதமர் மோடியையே பிரதான மாடல் ஆக்கியிருந்தார்கள். 120 கோடி இந்தியர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட அந்த 'ஜியோ' சலுகை குறிப்பாக 'டிஜிட்டல் இண்டியா' எனும் கனவில் இருந்த மோடிக்குச் சிறப்பு செய்யும் விதமாக அவர் படத்தோடு வெளியிடப்பட்டிருந்தது. ஜியோ விளம்பரத்தில் மோடி நடித்தாரா எனச் சர்ச்சைகள் அவரது கோட் பாக்கெட்டைப் பிடித்துத் தொங்கியது அனைவரும் அறிந்ததே. இலவசமாக இன்டர்நெட் வசதி அளித்து பல கோடி வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் அள்ளியதும் குறிப்பிடத்தக்கது. எல்லாச் செய்தித் தாள்களிலும் மோடி படத்தோடு கூடிய விளம்பரங்கள் வெளிவந்து பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்ததும், விதிகளை மீறிப் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதாக சொற்பத் தொகையான ஐநூறு ரூபாயை அபராதமாக விதித்து வாய்மூட வைத்தனர். 

Paytm

மோடி தலைமையிலான மத்திய ஆளும் அரசு டீமானிடைசேஷன் எனும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, நாடு முழுவதும் மக்கள் அல்லாட, ஒரு நிறுவனம் மட்டும் குஷியாகக் கொண்டாடியது. அது பே.டி.எம் எனும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனம். 'அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடத் தேவையில்லை... சில்லறைத் தட்டுப்பாடு இல்லை... திருட்டுப் பயம் இல்லை...' எனக் கவர்ச்சியாக விளம்பரம் செய்து அந்தத் திட்டத்தையே தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டது. அன்றைய நாளேடுகளில் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருந்தது மோடி மாடலாகியிருந்த பே.டி.எம் விளம்பரம். வாழ்த்துச் சொல்வதைப் போல வித்தியாசமாகக் கூவிய அந்த விளம்பரமும் நம் பிரதம மாடல் மோடியின் கணக்கில்தான் வரும். 

அமுல் 

பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் பிரபலமான நிறுவனமான 'அமுல்' மோடியின் உருவத்தைக் கார்ட்டூனாக வடிவமைத்து விளம்பரங்கள் செய்துவந்தது. ட்ரெண்டியான ஆட்களை வைத்து கார்ட்டூன் விளம்பரங்களைச் செய்வது அந்நிறுவனத்தின் வழக்கம். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், கிரிக்கெட் வீரர் கோலி, அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோரையும், ஐ.பி.எல், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றையும் வைத்து வியாபாரம் பார்க்கும். அப்படி, மோடியையும், பி.ஜே.பி-யையும் பிராண்டிங் செய்தபடியே தன் நிறுவனத்துக்கான லாபத்தையும் பார்த்துக் கொள்ளும். குஜராத்தில் அமுல் விற்பனை மையத்தைத் துவக்கி வைக்கும் விழாவில் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி விளம்பரத் தூதுவராக விசுவாசம் காட்டினார் பிரதமர் மோடி.

இவை தவிர ஃப்ரீடம் -251 எனும் டிஜிட்டல் இந்தியாவின் கானல் நீர்த் திட்டத்துக்கு வழிவகுத்து மிகப்பெரும் டிஜிட்டல் மோசடிக்குக் காரணமாயிருந்தது உள்பட சிலவற்றில் திரைமறைவு அம்பாஸிடராகவும் இருந்துள்ளார் இவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு